பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

41


சி. பி. சிற்றரசு 4f

பேசக்கூடாதென்ற கட்டளையிட்டிக்ருகின்றார். நான் அடைந்திருக்கும் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதானால் அவரிட்ட கட்டளைக்கு இண்ங்கமுடியாதவனாயி ருக்கின்றேன்! ஆனால் ஒரு பொதுக் கூட்டத்தின் சம்பிர தாயங்களையொட்டிப் பார்க்கும்போது தலைவர் விருப்பத்திற்கு புறம்பாக பேசுவது அவ்வளவு நாகரீமுமகல்ல. மேடையில் நிருத்திய பிறகு கடிவாளம் போடுவதைவிட இந்த பொருளைப்பற்றித்தான் பேசவேண்டுமென்றாவது பனித்திருக்கலாம். நீங்கள் இந்த பாதையில்தான் சென்று தீரவேண்டுமென்று அவர் கைக்காட்டியிருந்தால், நாங்கள் இந்த பாதையைவிட்டு விலகி வேரோர் பாதையும் கண்டுபிடிக்கவும் முடியாமல் மீண்டும் தலைவரையே ஒரு பாதைக் காட்டும்படி கேட்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு சூனியமான அறிவு படைத்தவர்களுமல்ல. ஆகவே தலைவர் அவர்கள் எதைப்பற்றிப் பேசச்சொல்கிறார் என்பது முதலில் எனக்குத் தெரியவேண்டும். வேம்பு உடலுக்கு நல்லதென்பதும், வெல்லம் கெடுதி என்பதும் யாவருமறிந்ததே. ஆனால் மக்கள் வெல்லத்தை விரும்பும் அளவுக்கு வேம்பை விரும்பி உண்பதில்லை. அதே போல் தலைவருக்கு நாங்கள் சொல்லப்போகும் கருத்துக்கள் வேம்பாயிருக்கலாம். அவர் இதை உட்கொண்டால் உடம்புக்கு நல்லது. ஆனால் விரும்புவது வேம்பல்ல ,வெல்லத்தை விரும்பிக் கேட்கிறார். அதை அவருக்கு அவர் விரும்பிய அளவு தந்து அவர் உடலைக் கெடுக்க நாங்கள் தயாராயில்லே. வேண்டுமானால் வேம்பின் கசப்பு அவர் நாவை நேரடியாக தாக்காமல் கொஞ்சம் வெல்லத்தை தடவிவேண்டுமானல் கொடுக்கிறோம். அந்த அளவுக்கு எங்களால் செய்யமுடியும். தலைவர் எதை விரும்புகிறார் என்பதை மீண்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் : - -