பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இலங்கை எதிரொலி


வளவு பேர்களிடம் பிள்ளே பிறக்காமல் கைகேயினிடத்தில் மட்டுமா பிள்ளை பிறக்கும் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். எப்படியும் நாம் ஒரு பாதுகாப்பான விவகாரத்தில் இருப்பது நல்லது என்ற எண்ணத்தால் கேகய நாட்டரசன் கேட்டுவிட்டான். இப்படி இவன் கேட்பதற்கு ஒப்புக்கொண்டால் தன் மக்களிடையே (பிறந்தால்) சகோதர வாஞ்சை வளர முடியுமா என்பதை தசரதன் அறியாதவனல்ல. அந்த இடத்தில் அவன் தன் குடும்பத்தில் சகோதர உணர்ச்சியை வளர்ப்பதைவிட தான் கைகேயியைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியே மிகுந்தவனாக காணப்பட்டான். உடன்பிறந்த ஒற்றுமைகுலைவதற்கு முதல் முதல் உலைவைத்தவன் தசரதன் என்று நான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறேன்.

இரண்டாவதாக :- ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியினம்மா ஆயிரம் இராமர்கள் சேர்ந்தாலும் உன் ஒருவனுக்கு இணையாக மாட்டார்கள். என்று பரதனை வர்ணித்து இராமனை இகழ்ந்ததின் மூலம், உடன் பிறந்த ஒற்றுமைக்கு இரண்டாவதாக உலை வைத்தவன் குகன்.

வாலி வதை

முன்றாவதாக:-அரக்கரோர் அழிவு செய்துக் கழிவரேல் அதற்கு வேறோர் குரகினத்தாரைக் கொல்ல மனு நெறி கூறிற்றுண்டோ இறக்கம் எங்கு குதித்தாய், என்பா லெப்பிழை கண்டாயப்பா, பறக் கழி இது பூண்டால் புகழை யார் பறிக்கர் பாலார், என்று தன் மரணத்தருவாயில் வழிந்கோடிய ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே கேட்டான், பதில்