பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

73


தொனிக்கிறதா என்பதை சர்க்கார் யோசிக்க வேண்டும்.

தமக்கையின் மகளைக் கட்டிக் கொள்வதினாலே யாருக்கு என்ன நஷ்டம் அல்லது தீங்கு. இது அவரவர்கள் சமுதாயத்துறையிலே கையாளும் முறையே தவிர, இப்படிச் செய்ததால் தேயிலைத் தோட்டங்கள் குபீரென்று தீப்பிடித்துக் கொண்டது, அல்லது கொழுந்து வருவதில்லை. அல்லது ரப்பர் மரங்களில் பால் சுரப்பதில்லை என்று யாராவது சொல்லிவிட முடியுமா? இரண்டாவது 1939-க்கு முன்பிருந்து இங்கு வாழ்ந்ததற்கு அத்தாட்சி வேண்டுமாம், ஒரு ஏழைத் தொழிலாளி எப்படி 14 ஆண்டுகளின் ரிக்கார்டுகளை வைத்துக்கொண்டிருக்க முடியும்? அப்படித்தான் 1939-ல் நான் என் தாயகத்திற்கு பணம் அனுப்பியிருக்கின்றேன், அந்த மணியார்டர் இரசீது இதோ இருக்கின்றது என்று காட்டினால், ஓ நீ இந்தியாவுக்குப் பணம் அனுப்பினாயா? அப்படியானால். உனக்கு இன்னும் இந்தியாவின் மேலேதான் ஆசை இருக்கிறது என்று சொல்லிவிடுவது, இன்றேல் நீ காட்டிய ஆதாரங்கள் போதவில்லை இன்னும் மேற்கொண்டு ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் கொண்டுவா என்பதுமாக தாமதித்து குடி உரிமையை மறுத்துவிடுவது. இப்படியெல்லாம் செய்தால் ஒரு 2 லட்சம் பேர்களைக் குறைத்து விடலாம் என்று சர்க்கார் எண்ணுகிறது.

ஆனால் நியாயமாகவே 1939-லிருந்து இங்கே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர்களுக்குமேல் இருக்கும். அவர்களில் ஒரு வட்சம் பேர்கள் தான் போதிய ரிக்கார்ட்டுகளைக் காட்டி சர்க்கார்