பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

இலங்கை எதிரொலி


வரவேண்டியதுதானே, என்று திடீரென்று கேட்டார். சரி, இவருக்கு இலங்கையின் நிலமை சரிவரத் தெரியவில்லை என்று அதிக நேரம் விளக்கம் தந்தபிறகு, நமது கோரிக்கை சரிதான் என மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார் என்று கூறினார்.

இந்த நிலையிலே முடிந்திருக்கிறது இதுவரை நிலமை. ஆனால் பிரச்சினைகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகின்றது. வேட்டி கட்டியவர்களை எல்லாம் கள்ளத்தோணி என்று கேலி செய்யும் அளவுக்கு, பிரச்சினை கேலிக்கிடமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, வேட்டி கட்டியவர்களெல்லாம் கள்ளத்தோணி என்று சொல்லுகிற நிஜார் போட்டுக்கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்து, நாங்கள் கள்ளத்தோணி, என்றால் நீங்களெல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்த கள்ளக்கப்பலா என்று கேட்டுவிடலாமா என்று பலருக்குத் தோன்றும், ஆனால் வேட்டியையும் நீஜாரையும் அடிப்படையாகக்கொண்டு எழும்பிய பிரச்சினையல்ல. அது நாகரீகத்தைப் பொறுத்த விஷயம். இங்கே ஐரோப்பா நாகரீகம் முழுக்க முழுக்கப் பரவி இருப்பதால் பலர் நிஜார் அணிந்திருக்கின்றார்கள். அதை எப்படி குற்றம் என்று சொல்லமுடியும்? அப்படியானால் நானும், தோழர் தங்கப்பழமும் வேட்டிதான். கட்டிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் கள்ளத்தோணியில் வந்தோம் என்று சொல்லிவிடமுடியுமா? அப்படியே வந்திருந்தாலும் சுமார் 25 நாட்கள் தங்கி, இலங்கையின் பெரும்பகுதியைச் சுற்றி, இருபது கூட்டங்களில் பேசி, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும், ஏன் பிரதமர் டட்லி சேனாநாயகா அவர்களை-