பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இலங்கை எதிரொலி


சிந்தித்து முடிவுகட்ட வேண்டிய பொறுப்பை உங்களுக்கே விட்டு விடுகின்றேன்.

புத்தன் அன்பை வளர்த்தான். இங்கே அருவறுப்பு வளர்த்தப்படுகிறது; புத்தன் எல்லாவற்றையும் துறந்தான். இங்கே ஒன்றும் துறந்ததாகத் தெரியவில்லை. புத்தர் அனைவரையுமே ஒன்றென்றார். அவருடைய பல்லும் கண்டியிலே காட்டினார்கள். அது அவருடையதா அல்லவா என்பதல்ல நமது சிந்தனை, ஆனால் அப்பேராளன் பெயரைச் சொல்லிக்கொண்டே நீ யார், நான் யார் என்று இங்கே பேசப்படுகிறது. கொள்கைக்கும் மதிப்பில்லை, குணத்திற்கும் மதிப்பு இல்லை, உழைப்புக்கும் மதிப்பில்லை என்றாலும் ஒருவன் உரிமையையாகிலும் மதிக்க வேண்டாமா, குப்பை குன்றென உயர்வதும் கோபுரம் தாழ்வதும் காலம் கண்டு பலமுறை சிரித்த சம்பவங்கள்தானே!

மேலும் இங்கே வாழும் திராவிடர்களின் எந்தெந்த உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்கள் அக்கா மகளைக் கட்டிக்கொண்டிருந்தால் அவர்கள் வெளியேற வேண்டும். அக்கா மகளைத் திருமணம் செய்துகொள்வதினாலே சர்க்காருக்கு என்ன நஷ்டம். முஸ்லீம்கள் சிற்றப்பன் மகளைத் திருமணம் செய்து கொள்வதில்லையா? இந்தப் பழக்கங்கள் அவரவர்கள் இனப்பழக்கத்துக் கேற்றவாறு நெடு நாட்களாகச் செய்துகொண்டு வருகிறார்கள். இதை ஒரு குற்றம் என்று சர்க்கார் இப்படி ஒரு சட்டத்தை செய்திருப்பதானது மிகமிக மோசமானதாகும். அவர்கள் அப்படிச் செய்துகொண்டதாலே தோட்டங்கள் தீப் பிடித்துக்