பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

89


என்ற நம்பிக்கை நாளுக்குநாள் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றது. நாங்கள் இங்கே வந்தபிறகு சென்ற திங்கள் 25, 26ல் திருச்சிக்கு அருகாமையிலுள்ள லால்குடியில் மாவட்ட மாநாடு ஒன்று சிறப்பாக நடை பெற்றிருக்கின்றது. அதில் அறிஞர் அண்ணா பேசுகிற போது, தோழர் சம்பத் அவர்களை பர்மாவுக்கு அனுப்பி அங்கு கரேன்கள் வாழும் பகுதியைப் பார்த்துக்கொண்டு வரும்படி அனுப்பி வைக்கப்போகின்றேன் என்று பேசி இருக்கின்றார். அங்கெல்லாம் போய் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கம்யூனிஸ்டு தோழர்கள் கேலியும் கிண்டலுமாகப் பேசியிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்தியாவில் தோழர் கோபாலன் அவர்களுக்கு ஏற்பட்ட இடுப்பு வலிக்கு மாஸ்கோ ஆஸ்பத்திரியில் தான் மருந்துண்டு என்று அவர் அலைகிறபோது திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஏன் பர்மாவில் மருந்திருக்கக்கூடாது. யோசிக்காமல் எதையும் பேசுகிற போட்டியில் யாருக்காவது பரிசு கிடைக்குமென்றால் அந்த முதல் பரிசு கம்யூனிஸ்டு தோழர்களுக்குத்தான் கிடைக்கும். அவர்கள் தலைவர் கள், பலரை பலி கொடுத்த பிறகு சொல்வார்கள், நாங்கள் மார்க்கசீயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதின் விளைவு இப்படியாய்விட்டது என்று. ஒவ்வொரு நேரமும் மார்க்கசீயத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளுகிற அவர்கள் எங்கே மக்களுக்கு சரியான வழியைக் காட்டப் போகின்றார்கள் என்ற காரணத்தாலேயே நாங்கள் அவர்களை லட்சியப்படுத்துவதில்லை. புத்தர் ஒரு பார்ப்பனனைப் பார்த்து காசிக்குப் போக வழி எது என்று கேட்டார். அவன் வேண்டுமென்றே தவறான வழியைக் காட்டிவிட்டான் புத்தருக்கு புத்தியிருந்த