பக்கம்:இலட்சியப் பயணம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழரசு அதற்காகத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். தவறு இருந்தால் சொல்லுங்கள் ; நான் நடவடிக்கை எடுக்கிறேன். என் மேல் தவறு இருந்தால் சொல்லுங்கள் ராஜினாமா செய்வதற்குக் தயாராக இருக்கிறேன்! நான் என்னுடைய மகன் தவறு செய்திருந்தால் சொல்லுங்கள்: என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீங்கள் நிர்ணயிக் கிறீர்களோ அந்தத் தண்டனையைத் தர ருக்கிறேன்--என்றெல்லாம் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் தயாராக இப்படிப் பலமுறை நான் காமராசருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், லஞ்சம் ஊழல் லஞ்சம் ஊழல் என்று சொல்கிறார். லஞ்சத்துக்கோ ஊழலுக்கோ நான் வக்காலத்து வாங்க வில்லை. ஆனால் காமராசர் அவர்கள் பல இடங்களில் வக்காலத்து வாங்கியிருக்கிறார். லஞ்சம் ஊழல் என்று சொல்லப்பட்ட நேரத்திலெல்லாம் வக்காலத்து வாங்கியிருக்கிறார். காமராசர் தரும் உவமைகள் அதிலும் குறிப்பாக ஒரு புத்தகமே போட்டிருக்கிறார்கள், காமராசரின் உவமைகள் என்று. 31 காங்கிரஸ் நண்பர்கள் எல்லாரும் வாங்கிப் படிக்க வேண் டும். அந்தப் புத்தகத்தில் காமராசருடைய பேச்சில் 31-ஆம் பக்கத்தில்-அவர் சொல்கிறார் : சுதந்திராக் கட்சிக்காரர்கள் ஊழல் ஊழல் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். குழந்தைகளுக்குத் தாய் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதில்லையா அதைப் போல ! குழந்தைகள் அழுதால் பூச்சாண்டி வருவான்; உன்னைத் தூக்கிக் கொண்டு போவான்' என்று தாய்மார்கள் குழந்தை களுக்குப் பயம் காட்டுவதுண்டு. திடீரென்று குழந்தை, கேயம்மா! பூச்சாண்டியைக் காட்டு பார்க்கலாம்' என்று கேட் டால், விழிப்பார்கள். பூச்சாண்டியை எங்கிருந்து காட்டு வார்கள் ? காட்ட முடியாதல்லவா ? அதைப்போலத்தான் ஊழல் ஊழல் என்று பேசும் பேர்வழிகள் அதைக் காட்டச் சொன்னால் காட்ட முடியாமல் திகைக்கிறார்கள். எங் இப்படி ஊழலுக்கு வக்காலத்து வாங்கிக் காமராசர் பல இடங்களிலே பேசியிருக்கிறார்.