பக்கம்:இலட்சிய பூமி.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

தாலும் அவன் எப்போதுமே கவர்ச்சியுடன் காணப்பட்டது கிடையாது. அவனுக்கு வயது முப்பத்தொன்றுதான். இளம் பிராயம். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்வு-சாவு ஆகியவற்றின் விதி அவன் கையில் இருந்தது. ஏன், அவனே அங்கு சகலமாகவும் விளங்கினான். குள்ளமான உருவத்திற்கும் இளம் பிராயத்துக்கும் ஈடு செய்வதே போன்று, அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட மீசை வளர்த்திருந்தான். அவனுடைய கண்களில் எப்போது பார்த்தாலும் ஒருவகைக் கோபக்குறி தென்பட்டது. வல்லமை கொண்ட கடுமையான முகத்தோற்றத்துடன் அவன் விளங்கினான். அவனது நாசித்துவாரங்களின் தடித்த மயிர்கள் கீழிறங்கி அவனுடைய மீசையுடன் சேர்ந்திருந்தன!-விசேஷ குணம்தான்! அவன் சிரித்தால், அவனது கறுத்த-கரைபடிந்த பற்கள் பளிச்சிட்டுத் தெரிந்தன. இக்காட்சியைப் பார்ப்பவர்கள் அவனை ஒருபோதுமே மறக்கமாட்டார்கள். இவை போதாதென்று, அவன் விழிகள் வேறு ஊடுருவிப் பார்க்கும் பான்மையுடனே அல்லது தந்திரசக்தி படைத்தனவாகவோ விளங்கின. ஆகவே, அவன் முன்னிலையிலே மற்றவர்கள் சரளமாக நிற்கத் தயங்கினார்கள்! காலை ஒலிபரப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் டெங்-பிங் வந்து சேர்ந்தான். மேல் மாடியில் அவனுக்குரிய அலுவலகத்திற்குப் பின்புறத்தில் இருந்த தந்தி அறையை அடுத்து இருந்தது ஒலிபரப்பு அறை. அது சிறியதாகவும் புழுக்கமாகவும் உஷ்ணமாகவும் இருந்தது. அவன் வெள்ளைநிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/14&oldid=1405516" இலிருந்து மீள்விக்கப்பட்டது