பக்கம்:இலட்சிய பூமி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


சூழலில் பரவி வந்தனர். அந்தக் காட்சி பயமுறுத் தியது; அது போலியாகவும் இருந்தது. கோடிக் கணக்கான மக்கள் கொண்ட ஒரு தேசம் உணவு உற்பத்தியைப் பெருக்க இராணுவ அடிப்படையில் இயக்கப்பட்டால், அதன் விளைவு என்னுகும்?-குடி யானவர்களைப் போல அவன் இப்பெழுது கவனித் துக் கொண்டிருந்தான்! அவனுக்கு ஐம்பது கஜம் கீழே எழுபதுஎண்பது படைவீரர்கள் தோள்களில் சுமந்த துப்பாக்கிகள் சகிதம் பாலத்தைக் கடந்து மறு கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் நகர நகர, காலடிச் சத்தமும் தேய்ந்தது. சிப்பாய்கள் பாலத்தைக் கடந்து இடதுபுறம் திரும்பி ஞர்கள். அவன் கண்கள் அவர்களைத் தொடர்ந்தன. அவன் திரும்பிய போது சிறுவன் ஒருவனிடம், “சற்று முன்னே பாலத்தைத் தாண்டிய படைவீரர் கள் யார்” என்று விசாரித்தான் ஜேம்ஸ். 'குடிமக்களால் உருவாக்கப்பட்ட படையைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள்!" "எங்கே போய்க்கொண்டிருக்கிரு.ர்கள்?" 'போக்லோவுக்குப் போகிருர்கள் என்று நினைக் கிறேன். அங்கே நேற்று இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்!” தப்பாக எதையோ சொல்லி விட்டவனைப் போன்று பயந்து ஒடத் தலைப்பட்டான் அப்பையன். போக்லோவிற்கு என்ன நேரப்போகிறது?இக்கேள்வி அவனை வருத்திற்று; மதப் பிரச்சாரசபை இருந்த இல்லத்தை நோக்கிப் புறப்பட்டான் ஜேம்ஸ். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/69&oldid=1274840" இலிருந்து மீள்விக்கப்பட்டது