பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இலட்சிய வரலாறு


தினமாகக் கொண்டாடத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. திராவிடநாடு திராவிடருக்கு என்ற திட்டததை, நாம் அர்த்தமற்றுத் தீட்டிக் கொள்ளவில்லை- தக்க- மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன.

கண்டனம் செய்வோர், கேலி செய்வோர், அலட்சியமாகக் கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே- திராவிடநாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களைக் கொஞ்சம் ஆர அமர இருந்து யோசித்துப் பார்த்துவிட்டு ஒருமுடிவு்க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். பன்முறை கூறியிருக்கிறோம், இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்திலே நாட்டு மக்களுக்கு மீ்ண்டும் ஓர்முறை, அதே காரணங்களைக்கூறுகிறோம்:

1. இந்தியா என்பது ஒருகண்டம். எனவே, அது பலநாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுவதும் ஒருகுடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின்கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

2. இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சி கொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது. பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச் சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரேநாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர்.

3. மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்றுப் பந்தத்துவம்- இவைகள்தாம் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம்: திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று. இந்த மூன்று இனங்களில், திராவிடரும் முஸ்லீமும் இன இயல்புகளில் அதிகமான வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும்