பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

19

15. இந்தியா பிரியாது இருந்தால் இதுவரை, ராணுவப் பொருளாதார அறிவுப் பலம் வளர்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புதுச் சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல்வளையை மற்றொரு இனம் அழித்து நெரித்து்க் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கிவைத்திருந்தததால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடிபோய்விட்டால், இந்தியா இரணகளமாகும். இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போர் ஒரு உதாரணம். எனவே, இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க இனவாரியாக இடம் பிரித்து விடுவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி.

எனவே, இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச் சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதி்க்கம் அடங்கவும் பொருளாதாரச்சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம் சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாகப்பிரியவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர். இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்கவேண்டும் இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இனஇயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை மிதித்துத் துவைத்து அழி்க்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோல, இந்தியாவைச் செய்துவிட்டுத் தாங்கள் எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப்பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர்.

இன்னோரன்ன காரணங்களையும், ஆரிய ஆதி்க்கம் வளர்ந்த விதம், அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதன் அவசியம் ஆகியவைகளை