பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை ருக்கு போர்வாள் தந்திருக்கிறது! ஏந்திய வாளை அஞ்சாநெஞ் சுடன் வீசத் திராவிடத் தீரர் கூடினர். தலைவர் தந்த போர் வாளை முத்தமிட்டுக் கரத்திலே பிடித்துள்ளனர் ! முன்பெல்லாம் ஜஸ்டிஸ் மாநாடுகள். உத்தியோகத்துக்கு மனுப் போடும் பேனா முனைகளைத் தந்தது வாலிபர்களிடம் ! திருச்சியிலே வாலிபர் கரத்திலே தரப்பட்டது போர்வாள்!! திராவிடத்திலே படர்ந் துள்ள ஆரியக் கள்ளியை வெட்டி வீழ்த்த, வைதிக மென்ற ற பெயரால் வளைந்து நெளியும் வஞ்சளையைக் கூறு கூறாக்க, மக்களின் மனதிலே குவிந்து கிடக்கும் மடைமை எனும் நச்சுக் கொடியை அறுத் தெறிய, ஜாதி பேதமெனும் முட்புதரை அழிக்க,வீரரைத் தழுவி வீணராக்கும் பழைமை எனும் கொடுமையைக் கொல்ல, திராவிடத்தை மீட்கப் போர்வாளைத் திருச்சியில் தீரத் திராவிடர் கரத்திலே தந்தது. இலட்சியம் வளர்ந்த வரலாறு. . 33 இலட்சியம் நமது மூல முழக்கம் திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியம், இப்போது நமது மூல முழக்கமாகி விட்டது. மற்றப் பல பிரச்சினைகள் யாவும், இலட்சியத்துக்குத் துணை தேடும் அளவுக்கே கவனிக் கப்படுகின்றன. ஒரே நோக்கமாக, இந்த இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம். திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு, மத,சமுதாய, பொருளாதாரப் பிரச்சினைகளிலே பலவகையான கருத்துகளும், திட்டங்களும் உண்டு என்ற போதிலும். இவை யாவும், இசைக்கு உள்ள 'சுருதி ' போல, திராவிட நாடு திரா விடருக்கே என்ற இலட்சியத்துக்குத் தக்க விதமாகவே அமைத்துக் கொள்ளப்படுகின்றன. . உறுதிகொள்ள ஓர் நாள் இந்த இலட்சியத்தை நாம் கைவிடப் போவதில்லை என்ற நமது உறுதியைத் தெரிவிக்கவும், இந்த இலட்சியம் நிறைவேற முன்னம், இடையிலே வீசப்படும் சில்லரைகளைக் கண்டு திருப் 3