பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

37


சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறி விட்டன. முரண்பாடுகளாகவும் தெரியலாயின. விரோத உணர்ச்சியும்கூட வளர்ந்தது. தமிழகத்திலே, பல முகாம்கள் தோன்றலாயின! மூல முயற்சியை மறந்து விட்டனர்.

மடிந்த உணர்ச்சி கண்டு மாற்றார் மனமகிழ்ந்தனர்

கண்ணைக் கட்டிவிடப்பட்ட வீரன், சாலையிலே நடந்து செல்கையில், மரத்துக்கு மரம் மோதிக்கொண்டு சங்கடப்படுவதைப்போல, நாடு, இருந்தது. மீண்டும் ஒருமுறை திராவிட இன உணர்ச்சி தோன்றுமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அந்த உணர்ச்சி அடியோடு மடிந்து விட்டது என்று மாற்றார்கள் மகிழவும் செய்தனர்.ஆனால் இலட்சியம் மடியவில்லை—சமயத்துக்காகக் காத்து கொண்டிருந்தது. பலப்பல சமயங்கள் வந்தன— ஆனால் சரியான சமயங்களாகவில்லை.

தாழ்ந்த தமிழகம் தன்னார்வம் கொண்டது

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தக்க சமயமாயிற்று. நாடு எங்கும், காங்கிரஸ்மீது கோபமட்டுமல்ல அதன் அளவு குறைவுதான்— தமிழ்ப் பற்று, பரவிய காலம். எங்கும் சங்க நூற்களைப் வடிக்க ஆரம்பித்த காலம். தமிழனுக்கு தனியாக ஓர் மொழி உண்டு, தனியான பண்பு உண்டு என்ற பெருமையைப் பேசலாயினர்; ஐம்பெருங் காப்பியத்தைப் பற்றிய பேச்சு பொது மேடைக்கு வந்து விட்டது! ஆர்வம், தமிழ்மீது அதிகமானதும், இடையே, புராணீகர்களும் புகுந்து கொண்டனர். ஆனால் அவர்களின் ஆதிக்கம் வளரமுடியாதபடி, தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் தமிழ்மொழி தாழ்வுற்ற காரணம் என்ன, தமிழ்ப்பண்டி

மறைந்த காரணம், தமிழகச்சிறப்பு தேய்ந்த காரணம் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். அந்த ஆராய்ச்சி, அவர்களை விட்ட இடத்தில் கொண்டுவந்து சேர்த்தது அதாவது டாக்டர் நடேச முதலியாரின் கல்லறைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்திற்று. பழைய நினைவுகள், பழைய பரணிகள் மீண்டும் உலவலாயின !