பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இலட்சிய வரலாறு


உண்மைதானே, நியாயம்தானே, அவசியம்தானே கூறிக்கொண்டனர்; கூறிக்கொண்டே மேலும் யோசிக்கலாயினர்— இன்று எப்படி இருக்கிறது தமிழ் நாடு என்று. சர்வம் ஆரிய நியமாக இருக்கக்கண்டனர்— எப்போது இருந்து இந்நிலை என்று என்று ஆராயத் தொடங்கினர் - தமிழன் ஆரியத்துக்கு இடங் கொடுத்த நாள் தொட்டு இந்நிலை என்பதறிந்தனர் — அதற்கு முன்பு எந்திலை என்று ஆராய்ந்தனர்— முப்புறம் கடலும் வடபுறம் விந்தியமும் ஆரணளிக்க, அழகுத் திராவிடம், ஆற்றலுடன் விளங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். திராவிடத்தின் ஒரு பகுதி ஆந்திரராகி, பிறிதோர் பகுதி கேரளராகி விட்டதைக் கண்டனர்— பிரிந்தாலும், இவைகளுக்கிடையே மொழிவழியாக ஒருமைப்பாடு இருத்தலைக் கண்டனர்— பண்டைத் திராவிடத்தை நினைவிற் கொண்டனர்— ஆரியத்துக்கு எதிர்ச்சொல்லாக— ஆரியர் என்ற கலாசாரத்துக்கு முற்றிலும் மாறான கலாசாரத்தை உணர்த்தும் குறியாக — திராவிடம் என்ற சொல் இருக்கக் கண்டனர். சரிதமும், பூகோளமும், மக்கள் உளப்பண்பு நூலும் இந்த உண்மைக்கு ஆக்கம் அளித்திடக் கண்டனர்! ஓஹோஹோ கண்டோம் உண்மையை என்றனர். திராவிடநாடு திராவிடருக்கே என்றனர். இலட்சியம் முழு உருவம் பெற்றது! இன்று அந்த இலட்சியத்தை ஆதரிக்க திராவிடநாடு திராவிடருக்கே என்று கூற மட்டும் கூச்சப்பட்டுக்கொண்டு, மாகாண சுதந்திரம், மாகாண சுயாட்சி என்று சில பலர் கூறுவர். சிலர், முழு உரிமை நமக்கு, ஆனால் அகில இந்தியத் தொடர்பு வேண்டுமன்றோ என்பர், அவர்களின் வார்த்தையிலே உள்ள வளைவு நெளிவுகள் அல்ல, முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை— அவர்கள் இலட்சியத்தை நோக்கி நடந்து வருகிறார்கள் என்பதே முக்கியம்.

பித்தம் தெளிந்தும் சிந்திக்க மறுத்தார்!

தமிழ்நாட்டுக் காங்கிரஸின் தலைவர், நாம்திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடும் சமயமாகப் பார்த்து "திராவிடநாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற திட்டம், நாட்டை மேலும் பிளவுபடுத்துவ-