பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இலட்சிய வரலாறு


இந்நிலையில் உள்ள திராவிடத்திலே, ஆடை முதல் ஆணி வரை, வடநாட்டிலிருந்து வருகிறது. வருகிறது என்னும்போது, ஏராளமான பணம் இங்கிருந்து வடநாட்டுக்குப் போகிறது என்று பொருள்.

வளம் இழந்து, இருக்கும் கொஞ்ச நஞ்சம் வளத்தையும், வடநாட்டுக்குக் கொட்டி அழுதுவிட்டு, வறுமைப்பிணியுடன் வாடும் திராவிடம், தலைதூக்க, அதன் மக்களுக்கு முழுவாழ்வு கிடைக்க, வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ளவர்கள் திரும்பிவர, வாழ்க்கைத்தரம் உயர, திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது திட்டம் தவிர வேறு திட்டம் இல்லை!

பொருளாதாரத்தையே அடிப்படையில் கொண்ட இப்பிரச்சினையை, வெறும் கட்சிக் கண்களுடன் நோக்காமல், நாட்டுப்பற்று நிரம்பிய கண்கொண்டு காணும்படி, திராவிடர்கழகத்தைச்சாராதவர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

தலையிலே ‘பிரிபிரியாக’ வர்ணத் துணியைச் சுற்றிக்கொண்டு, போர் போராக உள்ள சாமான்களின் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு, வட்டிக்கணக்கைப் பார்த்துக் கொண்டே வயிற்றைத் தடவிக்கொண்டுள்ள மார்வாரியையும் பாருங்கள், பாரம் நிறைந்த வண்டியை, மாட்டுக்குப் பதிலாக இழுத்துச் செல்லும் தமிழனையும் பாருங்கள்! மெருகு கலையாத மோட்டாரில் பவனிவரும் சேட்டுகளையும் பாருங்கள், கூலி வேலைக்கு வெளிநாடு செல்ல, கிழிந்த ஆடையும், வறண்ட தலையும், ஒளியிழந்த கண்களும் கொண்ட தமிழன், கப்பல் டிக்கட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கும் காட்சியையும் காணுங்கள். இங்கே பச்சைப் பசேலென்று உள்ள நஞ்சை புஞ்சையையும் பாருங்கள், அதேபோது நடக்கவும் சக்தியற்று, பசியால் மெலிந்துள்ள தமிழர்களையும் பாருங்கள்-எங்களை மறந்து- இந்தக் காட்சிகளைக் காணுங்கள். நாங்கள் கூறுகிறோம் ஒரு திட்டம் என்பதைக் கூட மறந்து- நாங்களாக யோசித்து ஒருதிட்டம் கூறுங்கள். பண்டைப்பெருமையுடன் இருந்த ஒரு நாடு, பல்வேறு வளங்கள் நிரம்பியநாடு, இன்று, வடநாட்டுடன் இணைக்கப்பட்டு, இப்படி வதைபடுவது