பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 இல்லம்தோறும் இதயங்கள்


படுத்தும் வகையில் பேசாமல், அவனை அடையாளம் கண்டுகொண்டவள் போல், "ஒங்க அக்கா உள்ளே இருக்காங்க" என்று சொல்லி வாயை மூடும் முன்னாலே, சந்திரன், அவள் வழிவிடுவது வரைக்கும்கூட காத்திருக்காமல், மண் லாரிபோல ரயில் பெட்டிக்குள் ஏறினான். பாமா, பல்லவன் பஸ்ஸுக்கு வழிவிடும் ஆட்டோரிக்ஷா போல, அங்குமிங்குமாக ஆடி, தன்னை 'பேலன்ஸ்' செய்து கொண்டிருந்தபோது, சந்திரன் மணிமேகலைக்கருகே வந்து, மருமகப் பையனைத் துரக்கி வைத்துக்கொண்டு "பிரயாணம் எல்லாம் எப்படிக்கா? அந்தப் பொண்ணு யாருக்கா?" என்றான். கடைசி வார்த்தையைச் சொல்லும் போது, கொஞ்சம் படபடப்பையும் காட்டினான். மணிமேகலையும், படபடப்புடன் பதிலளித்தாள்.

 "அப்பாவுக்கு எப்படிடா இருக்கு?”
 "நல்லா இருக்காரு. அந்தப் பொண்ணு யாருக்கா?"
 "அந்தப் பொண்ணுன்னு சொல்லாதிங்க. இந்தப் பொண்ணுன்னு கேளுங்க. ஏன்னா, நான் இப்போ, அங்க இருந்து இங்க வந்துட்டேன்."
  சந்திரன், பாமாவை தர்மசங்கடமாகப் பார்த்தபோது, மணிமேகலை பொறிந்தாள்.'
  "ஏண்டா, அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு கேக்குறேன். நீ பொண்ணு விவகாரத்தை கேக்குற."
  "மோசமா இருந்தால் சொல்லியிருக்க மாட்டேனா?”
  "நல்லா சாப்புடுறாரா?”
  "நிறையா..."
   "அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துதா?”
    "வரல."