பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16 + இல்லம்தோறும் இதயங்கள்


  ஆட்டோரிக்ஷா, அவர்களை ஏற்ற வந்த டாக்ஸியைக் கடந்துகொண்டு சென்றது. பாமாவுக்கு ஒரே ஆச்சரியம். அண்ணிக்காரி நியாயத்தைக் கருதி ஆட்டோவில் அமர்ந்ததில் அவளுக்கு ஆச்சரியமில்லை. அவள், அப்படிச் செய்யவில்லையானால்தான் ஆச்சரியம். ஆனால் இந்த டாக்ஸி டிரைவர், தனக்குக் கிடைக்கவிருந்த 'கிராக்கி' பறிமுதல் செய்யப்பட்டாலும், ஆட்டோ டிரைவரை சிநேகித பாவத்துடன் பார்ப்பதைக் கண்டுதான் ஆச்சரியப்பட்டாள். ஒ... இவரு மெட்ராஸ் டிரைவர் இல்ல! இவரு ஏழைபாளைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒரு தொழிலாளி.
  "சொல்லுடா... அண்ணி, அண்ணன், குழந்தைகள்ளாம் எப்படி இருக்காங்க?" என்றாள் மணிமேகலை.
  "கொஞ்ச நேரம் சும்மா இருக்கா. மனுஷனுக்கு இங்க உட்காரவே முடியல."
  "வேணுமுன்னா, குழந்தைய வச்சிக்கிடுறீங்களா ?” என்று சொல்லிவிட்டு பாமா சிரித்ததும், மணிமேகலையும் சிரித்தாள்.
  ஆட்டோ ரிக்ஷாவும் சிரிப்பதுபோல் தோன்றிய சாலையின் பள்ளங்களைத் தாண்டிக்கொண்டே பறந்தது.
தூத்துக்குடி நகரின் கிழக்கு முனையில், காவல் தெய்வம் போலிருந்த வரஸித்தி விநாயகர் கோவிலைத் தாண்டியதும், நாற்பது கிலோ மீட்டர் வேகம் அறுபது கிலோமீட்டராக, ஸ்பிக் உரக் கம்பெனியைத் தாண்டி, முள்ளிக்காடு, காயல் முதலிய சாலையோரக் கிராமங்களைக் கடந்து இன்னொரு பஞ்சாயத்து ரோடு வழியாக (அதாவது அவ்வளவு மோசமான ரோடு) பாய்ந்து, தென்னந்தோப்பும், மாந்தோப்பும், தனித்தனியாகவும், அதேசமயம் சேர்ந்தாற்போலவும் தோன்றிய-குட்டி