பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ♦ இல்லம்தோறும் இதயங்கள்



மணிமேகலை யோசித்தாள். ஆரம்பித்துவிட வேண்டியதுதான். முதலில் பொதுப்படையாகவும், பிறகு வெளிப்படையாகவும் பேச வேண்டும். அவளுக்கே கொஞ்சம் வெட்கம். கல்யாணம் நடக்கிற வயசுதானே தவிர, அதை நடத்துற வயசில்ல. பரவாயில்ல... எப்படிப் பேசுறது.... பேசிப்பிடலாம்.

“எங்க பாமாவுக்கு இந்த ஊரு பிடிச்சி போயிட்டு அண்ணி.”

“எங்க பாமான்னு ஏன் பேசுற? நம்ம பாமா தங்கமான பொண்ணு.”

“அவங்க வீட்ல கல்யாணத்துக்கு பேசிக்கிட்டு இருக்காங்க.”

“மாப்பிள்ளை பார்த்தாச்சா?” என்றார் அண்ணன். “இன்னும் முடிவாகல... நம்ம ஊர்ப் பக்கமா பார்க்காங்க.”

“அவளைக் கட்டுறவன் கொடுத்து வச்சவன்...” என்றாள் அண்ணி.

“அப்படின்னா, நம்ம சந்திரன் கொடுத்து வச்சவன்தான்.”

அண்ணி, திடுக்கிட்டவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அண்ணன் வாயில் கிடந்த வெற்றிலையைக் காறித் துப்பிவிட்டு, ‘சம்மணம்’ போட்டு உட்கார்ந்தார். அப்பா, பேப்பரில் இருந்து கண்களை விலக்கினார்.

சிறிது நேர மெளனம். அண்ணிக்காரி, காலை மடக்கிப் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசினாள்.

“பெரிய விஷயத்த எவ்வளவு சாதாரணமாய்ப் பேசிட்டே... பொருத்தம் பார்க்காண்டாமா? நகை நட்டு