பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ★ இல்லம்தோறும் இதயங்கள்


சிரிச்சாரோ, அன்னைக்கி பவளக்கொடி விழுந்துட்டாள். என்னைக்கு கரும்புத் தோட்டத்துப் பக்கத்துல, சந்திரன் பாமாக்கொடியோட மோதிரக் கையை அழுத்துனாரோ, அன்னைக்கே கழுத்துல தாலி விழப்போறது எனக்குத் தெரியும்.”

மற்றவர்கள் அசந்துவிட்டார்கள். இந்த கோவிந்தனுக்கு, எப்படித் தெரியும்? கேட்டால் எப்படியோ தெரியும் என்பான். சொல்லமாட்டான்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. எதிரே வந்த டிராலி வண்டியில் மோதப்போன சந்திரனை ‘பாத்துடா’ என்றாள் அக்கா.

“முன்னெல்லாம் ஒன்னை வழியனுப்பும்போது ஒரே ஒரு கண்ணுதான் போனதுமாதிரி தெரியும். இன்றைக்கு, ரெண்டு கண்ணும் போனதுமாதிரி தெரியும். எப்படி பார்க்கதாம்?” என்றான் சந்திரன். அவன் சிரித்துக் கொண்டே பேசினாலும், பாமாவின் கண்கள், பார்வையை மறைக்கும் அளவுக்குக் குளமாயின. தோளில் வைத்திருந்த மருமகனை, சந்திரன் பாமாவிடம் நீட்டிய போது, ரயில் ஊளையிட்டது.

ஊதிக்கொண்டே போன ரயிலில் குலுங்கிக் கொண்டிருந்த மணிமேகலைக்கு, மீண்டும் புருஷன் வீட்டு ஞாபகம் வந்தது. பேமலி பிராப்ளம் என்றால் எதுவா இருக்கும்? ஒருவேளை இந்த பாமாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்குமோ? அது எப்படி பிராப்ளமாகும்? அந்த வீட்ல, நல்லதும் பிராப்ளம்தான்... கெட்டதும் பிராப்ளம்தானே... ஒருவேளை பாமாவுக்கு வேறு இடத்துல உறதியாகி இருந்தால் அட கடவுளே...

மணிமேகலை, தன் பயத்தை உள்ளடக்கிக் கொண்டே, எங்கேயோ லயித்திருந்த பாமாவின் கையைத் திருகி