பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 75


போட்டு பாடஞ் சொல்லிக் கொடுத்தாள். பாடங்களைப் படிக்காமல் அரட்டை அடிக்கும் பாஸ்கரையும், சீதாவையும் பலமாகக் கண்டித்தாள். மாமனாருக்கு பால் கொண்டு கொடுத்தாள். கணவனுடன் செல்லமாகச் சிணுங்கினாள். அதே சமயம், முன்பிருந்த ஏதோ ஒன்று குடும்பத்தினரிடம் குறிப்பாகக் கணவரிடம் இல்லை என்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. சீச்சி... காமாலைக் கண்ணுக்கு, கண்டதெல்லாம் மஞ்சளாம்...

மணிமேகலை ஆராய்ச்சியில் இறங்கவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

ஒருநாள்... அதற்குப் பிறகு வந்த நாட்களை எல்லாம் மாற்றிய ஒருநாள்.

ராமபத்திரன் வீட்டுக்கு வந்திருந்தார். இப்போதெல்லாம் அவர் அடிக்கடி வருகிறார். மணிமேகலையிடமும் சகஜமாகப் பழகுகிறார். அவர் வந்திருந்தபோது அவள், வீட்டுக்குப் பின்னால் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருந்தாள். கொல்லைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. என்றாலும் அவரைப் பார்க்க முடியவில்லையே தவிர கேட்க முடிந்தது. ராமபத்திரன், வீரபுத்திரன் போல் பேசினார்:

“நான். நல்லதுக்குத்தான் சொல்லுறேன் என்கிறது ஏன் ஒங்களுக்குப் புரியமாட்டக்கு? இது மோசமானது. அந்த நல்ல பொண்ணுக்கு வந்திருக்கப்படாது. ஆனால் வந்துட்டே. ஒரு குடும்பத்துல ஒருவருக்கு வந்தால் எல்லாரும் டாக்டர்கிட்ட சோதிச்சி பார்க்கணுமுன்னு ஏன் தோணமாட்டக்கு? அக்கா, ஒனக்கு அறிவு எங்க போயிட்டு? மச்சான் நீரு புத்திய கடன் கொடுத்திட்டீரா? சரி, ஒங்களுக்கு இஷ்டமில்லன்னா வேண்டாம். என் மகளயும், பேரப் பிள்ளியளயும் தடுக்கறதுக்கு ஒங்களுக்கு என்ன உரிம இருக்கு ஒண்னு கிடக்க ஒண்ணு