பக்கம்:இல்லற நெறி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இல்லற நெறி


இனம், மரபுவழி, உட்கொள்ளும் உணவு, அவளது சுரப்பி களின் நிலை, உளக் கூறுகள் முதலியவற்றைப் பொறுத்துள் ளது என்பதை அறிவாயாக. பதின்மூன்று வயதில் பூப்பெய்த வேண்டிய பெண் பதினெட்டு வயதாகியும் பருவமடைய வில்லை என்ருல், அதற்காகப் பெற்ருேர்கள் கவலை கொள்ள வேண்டாம். தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை முறைகளை யெல்லாம் மேற்கொண்டு இயற்கை நியதியைத் துரிதப் படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், சிலர் பத்தொன்பதா வது வயதில் கூட தாமாகவே சிறிது தாமதமாகிப் பருவ மடைகின்றனர். இருபது வயதிற்குமேலும் ஒரு பெண் பூப் பெய்தாவிட்டால், மருத்துவர் ஆலோசனையை மேற் கொள்ள வேண்டும்? தேவையான அளவு ஹார்மோன்கள் குருதியில் இல்லாமையே இதற்குக் காரணமாகும். கருப்பை வளர்ச்சி பெருமல் குழந்தையின் கருப்பைபோல் சிறிய தாகவே இருந்துவிடுவதால் வயதாகியும் சிலரிடம் மாத விடாய் தோன்றுவதில்லை. இதனைத் தக்க ஹார்மோன் களால் குணப்படுத்தி விடலாம்.

மாதவிடாய் வட்டம்: மாதவிடாய் சாதாரணமாக இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. ஆனல், மிகக் குறைந்த எண்ணிக்கையையுடைய பெண்களிடமே இந்த ஒழுங்குமுறை காணப்பெறுகிறது. பெரும்பாலோரி டம் இஃது இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து நாட்கள் வரை மாறுபட்டே நிகழ்கின்றது. ஆனால், ஒவ்வொருவருக் கும் இந்த முறை நாட்கள் ஒரே சீராக இருத்தல் வேண்டும். அப்படியில்லாமல் முன்னும் பின்னுமாக மாதவிடாய் முறை தவறி ஏற்பட்டால் அது மாதவிடாயில் ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு கோளாறு என்று உணர்ந்துகொள்ளவேண்டும். சூற்பை களில் ஊறும் சில ஹார்மோன்களும், அடித்தலைச் சுரப்பி யில் சுரக்கும் சில ஹார்மோன்களுமே மாதவிடாய் முறை தவருது ஏற்படக் காரணமாகின்றன. அடித்தலைச் சுரப்பி மட்டிலும் பதினறு வேறு வேறு ஹார்மோன்களே உண்.

1325 அடித்தலைச் evils—Pituitary gland: - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/144&oldid=1285147" இலிருந்து மீள்விக்கப்பட்டது