பக்கம்:இல்லற நெறி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இல்லற நெறி


லேயே இனப்பெருக்கம் சாத்தியமாகின்றது. இதுவே பாலறி முறை இனப்பெருக்கம் என்று வழங்கப் பெறுவதாகும்:

பாலறிமுறை இனப்பெருக்கத்தில் குறிப்பிடித்தக்க பல நன்மைகள் விளைகின்றன. பெற்ருேர்கள் தம்மை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு செல்வதைவிடத் தாம் பாலறி யணுக்களை உண்டாக்குவது மிகவும் சிக்கனமான முறையாகும்; இதல்ை உடனே பல புதிய உயிரிகளைத் தோற்றுவிக்க முடிகின்றது மேலான உயிர் வகைகளிடம் பாலறி முறை இனப்பெருக்கம் பிறப்பதற்குமுன் குழந்தை அதிக நாள் வளர்ச்சிக்கும் துலக்கத்திற்கும் இடம் தருவ துடன் பிறந்த பிறகும் அக்குழந்தையிடம் பெற்றேரின் கவனத்திற்கு வாய்ப்பினை அளிக்கின்றது. இருவேறு பெற் ருேர்களிடமிருந்துவரும் உயிரணுக்கள் சேர்வதால்குழந்தை உண்டாவதாலும், ஒவ்வொரு உயிரணுவிலும் தனித் தனி யான ஜீன்களும் வேறு ஆற்றல்களும் அடங்கியிருப்பதாலும் இம்முறையில் நடைபெறும் இனப்பெருக்கம் புதியவகையில் வேறுபாடுள்ள உயிரிகள் தோன்றுவதற்கும் புதிய கூர்தலற உயிரிகள் மலர்வதற்கும் வாய்ப்பினையளிக்கிறது.

ஒரு முட்டையும் ஒரு விந்தனுவும் ஒன்ருக இணைவதே பாலறி முறை இனப்பெருக்கத்தின் அடிப்படையாகும். இந்த உண்மை கடந்த ஒரு நூற்ருண்டுக்குள்தான் அறியப்பெற் றது: உயிரியல் துறை மிக அண்மைக்கால வளர்ச்சியே என்ப தற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். விந்தனுக் கள் முதன் முதலாக லீவென்ஹோக்' என்பாரால் கி. பி. 1877-இல்தான் நுண்பெருக்கியின் மூலம் கண்டறியப் பெற் றன: பாலுண்ணிகளின் முட்டையணுக்களைச் சூற்பை களில் முதன்முதலாக வான் பேர் என்பாரால் கி பி. 1827 இல் உற்று நோக்கியறியப்பெற்றன. ஆயினும், பத்தொன்ப

9. s8GorairGgspirat-Leeuwenhoek 10. ur gyfeirastils sit-Mammals t t. Gumtsăt (3uŕ#–yon Baer

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/176&oldid=1285163" இலிருந்து மீள்விக்கப்பட்டது