பக்கம்:இல்லற நெறி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இல்லற நெறி


கோடிக்கணக்கானவைகளாகி ஒன்ருேடொன்று சேர்ந்து ஒரு சிறு பந்து போன்ற தோற்றத்தை அடைகின்றன. இந்த வளர்ச்சி நிலைகள் (படம்-24) காட்டப்பெற்றுள்ளன. உற்று நோக்கி உணர்ந்து கொள்க. அணுக்களால் நிரம்பிய கருவி னைக் கருப்பந்து என்று வழங்குவர். இந்நி?லயில்தான் அது கருக்குழலிலிருந்து கருப்பையை அடைகின்றது. இதன் அளவு இப்பொழுது ஒரு குண்டுசியின் தலையளவு இருக்கும். கருவுற்றது தொடங்கி 15 நாட்கள் வரையிலும் (இரண்டு வாரம் வரையிலும்) முட்டை கருப்டையில் ஒட்டாமல் வளர்ந்து வருகின்றது. இப்பருவம் கருவின் முளைநிலை? அல் லது முதற்குல் கிலே என்று வழங்கப்பெறுகின்றது.

இரண்டு வாரத்திற்குப் பிறகு கருப்பையில் கரு ஒட்டிக் கொள்ளுகின்றது: ஒட்டிக்கொள்ளும் இடத்தில்தான் நஞ் கம்? கொப்பூழ்க் கொடியும்?' வளர்கின்றன: கொப்பூழ்க் கொடியின் மூலந்தான் கரு தாயினிடமிருந்து உணவூட்டம் பெறுகின்றது; இதுவே இரண்டாவது நிலை; இது பிண்ட கிலே அல்லது இளஞ்சூல் கிலே’ எனப்பெயர் பெறும் இந்நிலையில் முளைச்சூல் உருவம் பெருது இரண்டு திங்கள்வரை வளர்ந்து வருகின்றது; இரண்டாவது நிலையின் தொடக்கத்தில் பந்து போல் உருவம்பெற்ற கருப்பத்திலுள்ள எல்லாஅணுக்களும் "இசு” அல்லது முதுசூல் என்ற மூன்ருவது நிலையை அடைந்து விடுவதில்லை. அவைகளில் சில அணுக்கள் மற்றவைகளினின் றும் பிரிந்து குழந்தையின் உடலையமைக்கும் பணியில் ஈடு படுகின்றன. மிகத் தொடக்க நிலையில் மூன்று அடுக்குகளில் (புரைகளில்) உயிரணுக்கள் அமைகின்றன. அவை அமைப் பிலும் உருவத்திலும் பாகுபாடு அடைகின்றன. வெளிப் புரையிலிருந்து தோல், மயிர், நகம் முதலியவை தோன்று இன்றன. நடுப்புரையிலிருந்து தசைகள், குருதிக் குழல்கள், எலும்புகள்முதலியவைஉண்டாகின்றன. உட்புரையிலிருந்து

-25. påsir slås)-Germical stage: 26. [5G#-Piacen a: 27. கொப்பூழ்க்கொடி-Umbilical cord. 28. இளஞ்சூல் p?&D-Embryonic stage?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/186&oldid=1285168" இலிருந்து மீள்விக்கப்பட்டது