பக்கம்:இல்லற நெறி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இல்லற நெறி


கொள்ளும் என்றும் நீ நன்கு அறிந்து கொண்டுள்ளாய். சில சமயம்சிலரிடம் கருவுற்றமுட்டையின் பயணம் குழவின் ஒரி டத்தில் தடைப்படநேரிடலாம். கருக்குழலின் வீக்கம், கருக் குழலின்பாதை மிகச்சிறுத்து இத்தல், அல்லது இயல்பிகந்த கருக்குழலின் அமைப்பு ஆகிய காரணங்களால் இத் தடிை நேரிடலாம்: காரணம் எதுவாக இருப்பினும் தடை ஏற்பட் டால் கருவுற்ற முட்டை கருக்குழலின் உட்கவரிலேயே தன் னைப் பதித்துக்கொண்டு வளரத் தொடங்குகின்றது. இவ் வாறு கருவளர்வதைப் படம் (படம்-28) காட்டுகின்றது: இதில் கருவின் வளர்ச்சியையும் அப்பொழுது கருப்பையின் நிலையையும் உற்று நோக்கி அறிக. படம் 29இல் சாதாரண மாகக் கருப்பையினுள் கருவளர்வது காட்டப்பெற்றுள்ளது.

படம்-28: கருக்குழலில் கருப்பத்தின் நிலையைக் காட்டுதல்:

இரண்டு படங்களையும் ஒப்பிட்டு நோக்கி இயல்பிகந்த முறையில் கரு வளர்வதை நன்கு கண்டு தெளிக.

மெல்லிய நாணற்குழல் போன்ற கருக்குழலில் கரு வளர்ந்து குழந்தையாவது என்பது குதிரைக் கொம்பு, குழ வின் தசைக்கு ஒரளவு விரிந்துகொள்ளும் தன்மை இழப்ப தல்ை, அது கருத்தரித்து சில காலம் வரை மிதி வண்டியின் இரப்பர்க் குழலைப்போல் உப்பிக்கொண்டு.உள்ளே கரு வளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/202&oldid=1285176" இலிருந்து மீள்விக்கப்பட்டது