பக்கம்:இல்லற நெறி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 223

கட்டினையுடைய பெண்களை மூன்ருவது கருப்பத்திற்குப் பிறகு கருக்குழல்களைக் கட்டித் தைத்துச் செயற்கையாக மலடியாக்கி விடுகின்றனர்:

ஆயுதப் பிரசவம்: இனி, ஆயுதப் பிரசவம்' என்பது என்ன என்று சிறிது விளக்குவேன். சிரமமான பிரசவத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்திப் பிரசவத்தை நடத்தும் முறையே ஆயுதப் பிரசவம் என்பது இம்முறையில் கையாளப்பெறும் ஆயுதத்திற்கு ஃபார்செப்ஸ்' என்று பெயர். Forceps என்ற ஆங்கிலச்சொல் இலத்தின் மொழி யிலிருந்து வந்தது; இதற்கு இரண்டு நாக்குகள் என்பது பொருள்: இந்தக் கருவி இரு பெரும் தேக்கரண்டிகள் கைப்பிடியால் இணைக்கப் பெற்றவை போன்று செய்யப் பெற்றுள்ளது. தற்காலத்தில் மருத்துவ நிலையங்களில் பயன் படும் கருவி குழந்தையின் தலை நன்கு பொருந்துமாறு உன் வளைவுள்ள இரண்டு தகட்டினல் ஆனது: இவற்ருல் தாய்க் கும் சேய்க்கும் எந்தவித விபத்தும் நேரிடாது. பிரசவத்தின் முதல் நிலையில் இக்கருவியைப் பயன்படுத்த முடியாது. இரண்டாவது நிலையின்பொழுதுதான் இது கையாளப் பெறுகின்றது. குழந்தையின் தலை நன்முகக் கீழிறங்கி பனிக் குடம் உடைந்து கருப்பையின் வாய் முழுதும் விரிந்து தலை யோனிக்குழலில் இறங்கும்நிலையில் நல்ல வலி இல்லாத தல்ை குழந்தை பிறக்கத் தாமதம் ஏற்பட்டால் மருத்துவர் கள் இக் கருவியைப் பயன்படுத்துவர்: கருப்பையின் வாய் நன்ருக விரிந்துகொள்ளாவிடினும், பனிக்குடம் உடையா விடினும் இக் கருவியைப் பயன்படுத்த முடியாது.

மருத்துவசாலையில் இக்கருவி நடைமுறைக்கு வந்தது ஒரு கவர்ச்சியுடைய வரலாறு ஆகும். இதனைக் கண்டு பிடித்த பெருமை சேம்பர் லீன்" என்னும் குடும்பத்தைச் சாரும். கி. பி. 1569-ஆம் ஆண்டு வில்வியம் சேம்பர் லீன் என்பவர் சமயவெறிக் கிளர்ச்சியிலிருந்து தப்பித்துக்

76. Yuj5' 137 Fath-Instrumenta) delivery: 77; ஃபார்செப்ஸ்-Forceps. 7s. GarthLifsöss—Chamberlenz

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/229&oldid=598041" இலிருந்து மீள்விக்கப்பட்டது