பக்கம்:இல்லற நெறி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 農5軍

உடையவர்கள். வேலையில்லாத் திண்டாட்டமும் அவர்களி டம் இல்லை. மக்களுக்குத் துணை செய்வதற்கு அரசினர் செலவில் இயங்கும் பல சமூக சேவைத் திட்டங்களும் ஆங்கு உள்ளன. இவ்வளவு வசதியான சூழ்நிலை இருந்த போதிலும் அந்நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பகுதியி னர் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்குமேல் பெற்று வளர்க்கப் பண வசதி போதாது என்று கருதித் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான குடும் பக் கட்டுப்பாட்டு முறைகளே மேற்கொண்டு திட்டமிட்ட குடும்பங்களாக வாழ்கின்றனர். இந்நிலை நம்நாட்டில் இல் லாத காரணத்தால் அவர்களைவிட நாம் இம்முறையை அதி முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டும். ஆனல், நம்நாட்டு மக்கள் இன்னும் சம்பிரதாயக் குடும்ப வாழ்க்கை' முறை யையே அதிகமாகக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். தம் மக்கட்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஆற்ற வேண் டிய பொறுப்பையும் நம்மைவிட அவர்கள் அதிகமாக உணர் வதே இதற்குக் காரணம் ஆகும். இத்தகைய பொதுப்பின நாமும் உணர வேண்டுமல்லவா? கல்வியறிவுடையோர் பாமர மக்களுக்கும் இதனை உணர்த்த வேண்டு மன்ருே? எனவே, திட்டமிட்ட குடும்ப முறை-குடும்பக் கட்டுப் பாட்டு முறை-ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உயிர் நாடியாக-அடிப்படைக் கல்லாக-இருப்பதை நீ உணர் è厅玩j打高、

இனி, அடுத்து எழுதும் கடிதங்களில் அறிவியலப்படை யில் அமைந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றை மேற்கொள்ளும் வழிகளையும் பிற செய்திகளையும் ஒரளவு விரிவாக விளக்குவேன்.

அன்புள்ள,

திருவேங்கடத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/257&oldid=598106" இலிருந்து மீள்விக்கப்பட்டது