20
இல்லற நெறி
வண்ணமுள்ளன. நீ அத்தகைய நூல்களைப் படிக்கவும் வேண்டாம்; அத்தகைய விளம்பரங்களைப் பார்க்கவும் வேண்டாம். தமிழில் அறிவியல் அடிப்படையில் நல்ல நூல்களே இல்லை எனலாம்; அத்தகைய நூல்கள் நம் தமிழகத்திற்கு மிகமிகத் தேவை; இன்றியமையாதவை: திருமணம் பற்றி நீ படிக்கவேண்டிய சில ஆங்கில நூல்களை ஆங்காங்குக் கடிதங்களில் குறிப்பிடுவேன். அவற்றைப் படித்துப் பயன் பெறுவாயாக.
உன் பெற்ருேர்கள் உனக்காகத் தேர்ந்தெடுத்த பெண் உனக்குப் பிடித்திருக்கின்ருள் என்பதை அறிந்தேன்; திருமண ஏற்பாடுகள் யாவும் செய்தபிறகு திருமணப் பொருத்தத்தைப் பார்ப்பதில் பயன் இல்லை. இதுபற்றிய செய்திகளை அறிவதில் நீ உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பாயாயின், இதுவரை அப்பிரச்சினையைத் தள்ளிப்போட்டிருத்தல் கூடாது திருமணப் பொருத்தத் தைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டுமாயின், மணமக்களின் கடந்தகால, தற்கால உடல்நலத்தைக் குறிப்பிடும் பதிவேடுகள், அவர்களின் பொதுவான உடல்நிலை ஆகியவைபற்றி விவரமாக ஆராயவேண்டும். திருமணம் பற்றிய ஏற்பாடுகள் நிறைவு பெறுவதற்குமுன் இவற்றை ஆராய்ந்திருக்கவேண்டும்.
திருமண நோக்கங்கள்: இன்றைய நிலையில் திருமணப் பொருத்தத்தைப்பற்றி அறிவியல் அடிப்படையில் வரை யறுக்கப்பெற்ற எந்தவிதமான முடிவுகளும் இல்லை. ஏனைய துறைகளைப் போலவே, திருமணத்திலும் பொருத்தப்பாடு என்பது இன்றியமையாத தேவைகளை அல்லது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் திறனே. ஓர் ஆடவனும் பெண்ணும் பல காரணங்களுக்காக மணந்துகொள்ளு கின்றனர் என்பது உண்மையேயாயினும், மூன்று முக்கிய நோக்கங்களுக்காக மணந்து கொள்ளுகின்றனர் என்று
4 உடல் நலத்தைக் குறிப்பிடும் பதிவேடு-Health
record.