பக்கம்:இல்லற நெறி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 越6茨

ஆகின்ருள் எனக் கொண்டால், அவள் ஆகஸ்டு 1 லிருந்து 8 முடியும்வரையிலும் சாதாரணமாகக் கருத்தரியாள்; 9 லிருந்து 22முடிய உள்ள நாட்களில் கருத்தரிப்பாள்; மீன் டும் 23லிருந்து அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரையில் நிச்சயமாகக் கருத்தரியாள். இதனை விளக்கப்படத்தில் (படம்-46) காண்க :

வெப்பநிலை அறிமுறை : முட்டை பக்குவப்படுவதைச் சரியாக அறுதி யிடுவதில் கடந்த இருபது பாண்டுகட்குள் மற்ருெரு குறை கண்டறியப் பெற்றுள்ளது. அது 'வெப்ப நிலை அறிமுறை?" என்று வழங்கப்பெறும், ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் அவளுடைய உடல் வெப்பம் மாறிக்கொண்டு வருவதாகப் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். காலையில் துயிலெழுந்தவுடன் இந்த வெப்ப நிலைகளை அறிந்து குறித்துக் கொண்டால், இந்த வேறுபாடுகளைக் காணலாம். பெரும்பாலும் ஆசனவாயில் இந்த வெப்ப நிலைகளை அளந்து காணல் சிறந்தது. மாதவிடாய் வட்டத்தின் தொடக்கத் தில் இரண்டு வாரங்களுக்கு இந்த வெப்பநிலை 97-9891 இருக்கும்; 98°Fக்கு மேல் இது உயர்வது அரிது. இந்தக் காலத்தின் எல்லையில் வெப்பநிலை 29 வரை குறைந்திருந்து அதன்பிறகு திடீரென்ருே அல்லது படிப்படியாகவோ 1°F வரை உயருகின்றது. அதன்பிறகு வெப்பநிலை 98-999F வரை நிலையாக இருக்கின்றது; அடுத்த தூரம் வரை இந் நிலையே நீடித்திருக்கும்: வெப்பநிலை தாழ்ந்து உயர்வதுசாதா ரணமாக அடுத்த துாரம் தொடங்குவதற்குப் 14 நாட்கள் முன்னதாக நடைபெறுகின்றது என்றும், இக்காலம் முட்டை பக்குவப்படுதலுடன் பொருந்துவதற்குத் தக்க சான்றுகள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்; இம்முறையினால் முட்டை பக்குவமடைதலை அறுதியிடல் மிகவும் சிறந்தது என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

மாதவிடாய் வட்டத்தில் மூன்று பகுதிகள்: சருத்தரி நாட் களைக் கணக்கிடும் அடிப்படையில் மாதவிடாய் வட்டத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். அவை: முட்டை பக்

30. வெப்பநில்ை Assopo so-Temperature method.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/269&oldid=598133" இலிருந்து மீள்விக்கப்பட்டது