பக்கம்:இல்லற நெறி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இல்லற நெறி


றனரேயன்றி இதையே முற்றும் முடிந்த முறையாகக் கொள்ளுவதில்லை. கருத்தரித்தாலும் கவலையில்லை என்று எண்ணுபவர்கள் இம்முறையை மேற்கொள்ளலாம். மேல் நாடுகளில் கருத்தரி நாட்களில் கருத்தடைக்கருவிகளையும்: கருத்தரியா நாட்களில் இம்முறையையும் மேற்கொள்ளுகின் றனர் பெரும்பாலானவர்கள் கருத்தரியா நாட்களில் பாது காப்பின்றிக் கலவி புரிதலையே? விரும்புகின்றனர். இன்று உயிரியல், சமூக வியல் அடிப்படையில் மானிடக் கருத்தரிப்பு பற்றிய ஆராய்ச்சி மிக உற்சாகத்துடன் மேற்கொள்ளப் பெற்று வருகின்றது. வருங்காலத்தில் மானிட இனப் பெருக்க வட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஐயமில்லை.

கருத்தடைக் கருவிகளைப் பயன்படுத்திக் கருத்தடை செய்யும் முறைகளை அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

34. 5(533&ol-ā āQ59335ir-Contraceptives 35. 3,6963–Joitus

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/272&oldid=1285210" இலிருந்து மீள்விக்கப்பட்டது