பக்கம்:இல்லற நெறி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 露鳍朗

பிகையும் அம்பாலிகையும் வேத வியாசரால் கருப்பம் உற்ற செய்தியையும், அவ்வாறு தோன்றிய திருதராட்டிரன், பாண்டு ஆகியோரின் பிள்ளைகளே கெளரவர்கள், பாண்ட வ்ர்கள் ஆவர் என்பதையும் ஈண்டு சிந்திப்பாயாக இவ் வரலாறுகள் யாவும் மக்கள் நாகரிகமடையா நிலையைக் காட்டுகின்றது. இவ்வரலாறுகளைத் தொல்காப்பிய காலத் துக் காதல் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழி னத்தின் தொன்மையும் நாகரிகத்தின் பழமையும் நன்கு புல குைம். அது கிடக்க.

இம்முறை எளிதாகவும், எவ்வித முன்னேற்பாடுகள் இல்லாமலும், கருத்தடைக் கருவிகளின் தொல்லை இல்லா மலும் எங்கும் எப்பொழுதும் மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதால் இதைப் பலர் விரும்புகின்றனர். இதைப் பெரும்பான்மையான மருத்துவ நிபுனர்கள் நன்மை தரும் முறையாக ஒப்புக்கொள்வதில்லே; பலவிதத்தில் தீங்கு பயக் கும் முறையாகவே இதனைக் கருதுகின்றனர். இக் காலத்தில் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப் பெற்ற நோயாளர் களின் 75 சதவிகிதம் இம் முறையைக் கையாளுவதனலேயே ஏற்படுகின்றது என்று, நரம்புக் கோளாறுகள் பற்றிய நிபுணராகிய சிக்மண்ட் பிராய்ட்' என்ற அறிஞர் கருதுகின் ருர். இம்முறை சிறிதளவேனும் திருப்தி தரும் முறையன்று என்பதற்கு மூன்று காரணங்கள் தரப்பெறுகின்றன. இத ளுல் உடலியல்பற்றிய கோளாறுகளும் உளவியல்பற்றிய நோய்களும் ஏற்படுகின்றன என்றும், தவிரவும் இம்முறை அவ்வளவு நம்பிக்கை வைக்கத் தகுந்தது அன்று என்றும் கருதுகின்றனர். இக் கருத்துகளே ஒவ்வொன்ருகச் சிறிது விளக்குவேன்.

இம்முறையினுல் கலவியின்பமே இல்லாது போகின்றது, பயந்துகொண்டு கள்ளப் புணர்ச்சி செய்வோரின் நிலையிலி ருக்கும் இம்முறை கலவியின் பத்தின் உச்ச நிலை உணர்வுக்குத்

42. Gjin sig 1. hlog friül --Sigmond Freud

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/275&oldid=598147" இலிருந்து மீள்விக்கப்பட்டது