பக்கம்:இல்லற நெறி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

இல்லற நெறி


கிக் கொள்வது நன்று இதனைத்தாமாகவே விரும்பிச்செய்து கொள்ள வேண்டுமேயன்றி சட்டத்தின் மூலம் கட்டாயப் படுத்துவது விரும்பத்தக்கதன்று; கடியத்தக்கது. எனவே, ஒரு குடும்பத்தில் உடற்குறைகளோ உளக்குறைகளேர் மரபு வழியாக இறங்கி வருவது உறுதியாகத் தெரிந்தால் அறுவை மருத்துவமுறை மூலக் மலடாக்கிக் கொள்வதை மேற் கொள்ளலாம். இஃது இனமேம்பாட்டியல் பற்றிய காரணம் ஆகும், அமெரிக்காவின் இக் காரணம்பற்றிச் சட்டமே இயற்றப்பெற்றுள்ளது. இங்கு மலடாக்கிக் கொள்வது கட்டாயம் என்றிருந்தாலும், நோயாளியின் விருப்பத் தையோ, அல்லது அவர் தன்னுடைய எண்ணத்தைத் தெரி விக்க இயலாத நிலையில் அவருடைய நெருங்கிய உறவினரின் அல்லது சட்டப்படியுள்ள பாதுகாப்பாளரின் இசைவு பெற்ருே இம் முறையை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகின்றது. செருமனியில் நாஜி ஆட்சியில் இது கட்டாயமாக இருந்தது. பொதுமக்களாட்சி நிலவும் நாடு களில் சட்டப்படித் தடுப்பது பொதுமக்கள் விருப்பத்திற்கு விரோதமானது; அவர்களது விருப்பத்தை அவமானப் படுத்துவதுமானது:

ஒரு குடும்பத்தில் தேவையான அளவு குழவிகள் பிறந்த பிறகு, இனி குழந்தைகள் பிறந்தால் அவர்கட்கு எல்லா முறைகளிலும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பொருளாதார நிலை போதுமானதன்று என்பதை உணர்ந்தால், கணவனே மனைவியோ தம்மை மலடாக்கிக்கொள்ளலாம். இது சமூக இயல்பற்றிய காரணம் அகும். ஒருவர் மலடாக்கிக்கொள் வதற்கு இக் காரணம் போதுமானதன்று: இது தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும். மானிட வாழ்க்கை மிகச் சிக்கலானது. வாழ்க்கையில் எதிர்காலத்தில் நேரிடப் போவதனைத்தையும் முன்னரே ஒருவராலும் அறுதியிட முடி யாது. மலடாக்கிக் கொள்வதென்பது மீண்டும் குழந்தை பெறும் நிலையை அடையமுடியாத ஒரு வழியாகும். எனவே, இம் முறையை மேற்கொள்வதற்கு முன்னர் எச்சரிக்கை யுடன் இருத்தல் வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/300&oldid=1285224" இலிருந்து மீள்விக்கப்பட்டது