பக்கம்:இல்லற நெறி.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

இல்லற நெறி


பாய்மம் பெரும்பாலும் புராஸ்டேட் சுரப்பியினின்றும் விந்துப் பைகளிலிருந்தும் வெளிவந்த சாறுகளேயாகும். இந்தப் பாய்மத்தில் ஒரு கனசென்டி மீட்டருக்கு 50 மில்லி யனிலிருந்து 100 மில்லியன் வரையிலும் விந்தனுக்கள் உள்ளன. அஃதாவது, ஒரு தடவை வெளியாகும் விந்துப் பாய்மத்தில் இருநூற்றிலிருந்து நானூறு மில்லியன்வரை விந்தணுக்கள் இருக்கும் என்பது தெளிவாகின்றது. சாதா ரணமாக நன்னிலையிலுள்ள விந்தணுக்கள் 24 மணி நேரத்தி, லிருந்து 72 மணி நேரம் வரை உயிரோடிருப்பது அவற்றின் சிறப்பியல்பாகும். ஒரு கன சென்டி மீட்டருக்கு நாற்பது மில்லியனுக்குக் குறைவாக விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பினும், அவை உயிரோடிருக்கும் கால அளவு குறை வாக இருப்பினும், அல்லது விந்தணுக்களிலும் பல இயல்பி கந்த வடிவமுடையவையாக இருப்பினும் அவ்வறிகுறிகள் யாவும் குறைந்த அளவு கருத்தரிக்கும் ஆற்றலைக் காட்டு கின்றன என்று கொள்ளவேண்டும்.

விந்துப் பாய்ம ஆராய்ச்சி ! இன்று விந்துப் பாய் மத்தை ஆராய்வதற்குப் பல முறைகள் கண்டறியப்பெற் றுள்ளன. இவை விந்தணுக்களின் அளவையும் தன்மையை யும் மிகச் சரியாக அறுதியிடுகின்றன. ஒரு தடவை வெளி யாகும் வித்துப் பாய்மத்திலுள்ள விந்தணுக்களைக் கணக்கிடு வதும், அவற்றின் உயிர்ச் சக்தியை ஆராய்வதும், அவற்றின் வடிவத்தையும் அமைப்பையும் சோதிப்பதும் இன்று சாத்தியப்படுகின்றது. ஒரு சிறந்த நுண் பெருக்கியின்மூலம் பார்க்கும்பொழுது நாம் காணும் விந்தணுக்களின் அசைவு களும் வடிவங்களும் விந்துனுப்பகுப்பாராய்ச்சிக்குத் துணை யாக இருக்கும்பொருட்டுப் ஒளிப்படமாக எடுக்கப்பெற் றுள்ளன. சிலருட்ைடிய விந்துப் பாய்மத்தில் விந்தணுக்களே இருப்பதில்லை. இந் நிலையை அஸாஸ்பெர்மியா’29 என்று

1 8. விந் gli solusár–serinal vesicles 19. மில்லியன் என்பது பத்து இலட்சம். z0, savosið Gufrustur–Azoospermia

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/316&oldid=1285231" இலிருந்து மீள்விக்கப்பட்டது