பக்கம்:இல்லற நெறி.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு & 1 &

லாம். மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் விந்துப் பாய் மத்தை மருத்துவர் ஒருவர் சோதிக்க நேர்ந்தது அதில் விந்து ணுக்களே இல்லை. அவருக்குத் திருமணம் நடைபெற்று எட் டாண்டுகள் ஆகின்றன; அவருக்கு நாலரை பாண்டுகள் நிரம் பிய குழந்தையொன்றும் இருக்கின்றது இந்தக் குழந்தைக் குப் பிறகு மூன்ருண்டுகளில் அவருக்குப் புட்டாலம்மை நோய் ஏற்பட்டது. இந்நோய் மிகவும் சிக்கலாகி அவருடைய இரண்டு விரைகளிலும் வீக்கம் கண்டது: அதன் பிறகு இரண்டு விரைகளும் விந்தனுக்களை உற்பத்தி செய்யும் திறனை இழந்தன: இத்தகைய நோயிேைலா அல்லது வேறு காரணத்தாலோ ஒரு விரை பாதிக்கப்பெருவிட்டா லும், அதிலிருந்து கருவுறுவதற்குப் போதுமான வித்தணுக் கள் உண்டாகும். ஒற்றை விரையினுல் தந்தையரான எத் தனையோ ஆண்கள் உள்ளனர் என்பதை மருத்துவ அறிஞர் கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

டெஸ்டிகுலர் பயோப்லி : மேற்கூறப்பெற்ற இாண்டு குறைகளையும் டெஸ்டிகுலர் பயோப்ளி என்ற ஒ சிறிய அறுவை முறைச் சிகிச்சையினுல் கண்டறியலாம். மிகச் சிறிய அளவு விரையின் இழையத்தைப் பெயர்த்தெடுத்து நுண் பெருக்கியில் வைத்துச் சோதித்கப்பெறுகின்றது. இச் சோதனையால் விரைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்யவில்லை என்பதை அறிந்தால், இதற்குக் கழுவாய் காண்பது மிகவும் அரிது. இன்று வரை இதற்குக் கழுவாயே கண்டறியப் பெறவில்லை. ஆயினும், இத்துறையில் நுட்ப மான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதே சோதனை விந்தணுக்களின் உற்பத்தி நன்முறையிலுள்ளது என்று காட்டினல், விந்து பாயும் துாம்புகளில் அடைப்பு இருத்தல் வேண்டும் என்பது உறுதியாகின்றது. இக் குறையை அறுவை மருத்துவ முறையால் சரிப்படுத்தித் துரம்பின் வழியிலுள்ள தடையை நீக்கிவிடலாம். முதலில் குழந்தைப்பேறே இல்லாத தம்பதிகளுள் கணவருக்கு இச்

24 டெஸ்டிகுலர் LGurûsâ-Testicular biopsy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/319&oldid=598245" இலிருந்து மீள்விக்கப்பட்டது