பக்கம்:இல்லற நெறி.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 83?

ஏச்.ஜே. முல்லர் என்ற அமெரிக்க உயிரியலறிஞர் தாம் வெளியிட்ட சிறு நூலொன்றில் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒரு சில மனிதர்களின் விந்தணுக்களை யாதாவது ஒரு முறைப்படி அவர்கள் இறந்த பின்னரும் உயிரோடிருக்குமாறு வைத்தி ருக்கலாமென்றும், மானிட இனமேம்பாட்டியல் காரண மாக அவற்றைச் செயற்கையான விந்து புகுத்து முறைகளில் பயன்படுத்துதல்கூடும் என்றும் கூறியுள்ளார். இம்முறையி ஞல் ஒருவர், தான் இயற்கை எய்திய பிறகும் என்ணற்ற குழந்தைகட்குத் தந்தையாகலாம். இத்தகைய செயல்கட் காக எத்தகைய உயர்ந்த மனிதர்களின் விந்துவினைச் சேக ரிக்கவேண்டும் என்பது ஒரு தீராதபிரச்சினையாகவே இருந்து வருகின்றது. இவை யாவும் அறிவியல் மனக்கோட்டை களே யன்றி பிறிதொன்றுமல்ல. ஆனால், நாம் பழைய முறைகளிலேயே குழந்தைப்பேறு அடைவதில் திருப்தியடை வோமாக: குழந்தைப்பேறு இல்லாதவர்களும் தத்துப்பிள்ளே எடுக்கும் முறையினையே மேற்கொள்வார்களாக. தத்துப் பிள்ளை எடுத்த பிறகு ஒரு சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருக் கின்றன. கருவுறுவதற்குக் காரணமாக இருந்த உளவியல் பற்றிய யாதோ ஒர் உள்தடை விடுபட்டதும், மலடு நீங்கி இவர்கட்குக் குழந்தைப்பேறு ஏற்பட்டது என்பதை தி அறிவாயாக3

இனி, கருவுற்ற இளஞ்சூல் குழந்தையாக ஆகும் வரை யிலும் எவ்விதமான கோளாறுகட்கும் உட்படலாம் என்பது பற்றியும், அவற்றைத் தவிர்ப்பதெங்கனம் என்பது பற்றி பும் அடுத்த கடிதத்தில் எழுதுவேன்;

இங்கனம், திருவேங்கடத்தான்.

ಡಾ. முல்விெ 运 Muiler. - 67. apólestara unawá Garrulant-sár-Scientific fantacie இ-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/343&oldid=598297" இலிருந்து மீள்விக்கப்பட்டது