பக்கம்:இல்லற நெறி.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கப்பேறு 349

இன்று பல முறைகளில், இவற்றை அரசாங்கம் செய்து வருகின்றது. இதல்ை நாட்டுப்புறங்களிலும் ஒழுக்கக் கேடான செயல்கள் விரைவாகப் பரவி விடுமோ என்ற அச்ச மும் அறிஞர்கள் மனத்தில் எழாமல் இல்லை. உணவுப் பங்கிடு என்ற முறையை மக்கள் நன்மைக்காகவே அசினர் வகுத்தனர். நடை முறையில் மக்களும் வணிகர்களும் அரசாங்க ஊழியர்களும் அத்திட்டத்தை நன்முறையில் நடக்க முடியாது குலைத்தனர். இறுதியில் அஃது ஒரு பேயாக மாறியதனுல் அதனை அடியோடு ஒழிக்க வேண்டியதாயிற்று. அங்ங்னமே, குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளையும் கருத் தடை முறைகளையும் மக்களிடையே நன்முறையில் பயன் படச் செய்வது செயலாற்றுவோரின் கடமை; தவருன முறைகளில் - குறிப்பாக ஒழுக்கக் கேடான செயல்கட்குப் பயன்படுத்தாதிருப்பது மக்களின் பொறுப்பு. நாட்டு நலனே மக்கட் பொறுப்பாக-குறிக்கோளாக-அமைதல் வேண் டும். மணமான ஒவ்வொரு தம்பதிகளும் இத்துறையில் ஒத்துழைக்க வேண்டும்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/355&oldid=598323" இலிருந்து மீள்விக்கப்பட்டது