பக்கம்:இல்லற நெறி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

854 இல்லற தெறி

பாலுறவுதான் மிக முக்கியமானது என்று பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவர்கள் தொல்காப்பியர் போன்ற அநுபவம் மிக்க பண்டைப் பெரியோர்கள் குறிப்பிட்ட ஏனைய பொருத்தங்களே நன்கு சிந்தித்துப் பார்க்கின்ருர்கள் இல்லை. தொல்காப்பியர் கூறியுள்ள பத்துவகைப் பொருத் தங்களை ஏற்கனவே குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூர்வா யாக, பால் கவர்ச்சியால் மட்டிலும் ஒரு திருமணம் வெற்றி யாக முடியும் என்று சொல்வதற்கில்லே. புலன்களைக் அடிப் படையாகவுடைய இன்பம் மாறக்கூடியது. அதனை மட்டிலும் அடிப்படையாகக் கொண்ட திருமணம் புலனுணர்ச்சி குன்றி யதும் தவறிப் போதல் கூடும். இதனை நன்குணர்ந்துதான் பெயர் தெரியாத நற்றினைப் புலவர் ஒருவர் தோழியின் "ஒம்படைக் கிளவியாக,

அண்ணுந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர!” என்று கூறியுள்ளார்; உண்மையான காதல் பயிர் செழித்து வளர்வதற்கு அன்பு அடிப்படையானது; ஏனைய கூறுகளும் இன்றியமையாதவை: திருமணத்தின் விளேவு வெற்றியாக வேண்டுமாயின் சாதகமான கூறுகள் மிக வேண்டும்; பாதக மான கூறுகள் இல்லாது அமைதலும் வேண்டும்.

தம்பதிகளின் ஏனய கூறுகள்: திருமணத்தின் பயன் இன்பமானதாக அமைதல் வேண்டுமாயின், தம்பதிகளிடம் ஒன்றுபடுத்தும் அன்பும் காதலும் இருத்தல் வேண்டும். இரு வருடைய குடும்பப் பாங்கு இருவருடைய கவர்ச்சிகள், மனப்பான்மைகன், எண்ணப் போக்குகள், பொருளாதார நிலைகள் ஆகியவை யாவும் சரியாக இருப்பதுடன் இருவரு டைய சொந்த, குடும்ப, சமூக உறவு முறைகளும் மனநிறை வுள்ளனவாக அமைதல் வேண்டும். இவ்வளவும் சரியாக இருந்து பாற்கவர்ச்சி இல்லாவிட்டாலும், அல்லது பாலுறவு

4. rosé–Senses 5 தத்திணை-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/360&oldid=598335" இலிருந்து மீள்விக்கப்பட்டது