பக்கம்:இல்லற நெறி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் $ 7

3

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன் நலனறிய அவா.

இனப் பெருக்கப் பொருத்தம் : சென்ற கடிதத்தில் இனப் பெருக்கத்தைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ஒரு மகனுக்கு அல்லது ஒரு மகளுக்குப் பிள்ளைப்பேறு ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை முன்னரே அறிந்துக்கொள்ள இயலுமா என்ற ஐயம் இயல்பாகவே உன் மனத்தில் எழ லாம். ஆம்; இயலும். ஒர் ஆடவனின் புதிதாக எடுக்கப் பெற்ற விந்துவை: நுண் பெருக்கியால் சோதித்து அவனது கருவுறச் செய்யும் ஆற்றலைக் கிட்டத்தட்ட மிகச் சரியாக அறுதியிட முடியும். பிறவி சார்ந்த இயல்பிகந்த தன்மை யினலோ அல்லது நோயினுலோ பிற காரணத் தாலோ இனப்பெருக்க உறுப்புக்கள் பழுதடைந்த காரணத் தாலோ ஒர் ஆடவனின் கருவுறச் செய்யும் ஆற்றலைப்பற்றி ஏதாவது ஐயம் இருக்குமாயின், இத்தகைய சோதனையைத் திருமணத்திற்கு முன்னதாகச் செய்தல் இன்றியமையாதது; அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணத்திற்கு முன்னர் செய்யப்பெறும் பொது மருத்துவச் சோதனையின் பொழுதே இச்சோதனையும் செய்யப்பெறுதல் வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். இங்கனமே, ஒரு பெண்ணின் கருவுறச் செய்யும் ஆற்றலையும் மதிப்பிடுதல் கூடும். ஆயின், ஒரு குறிப்பிட்ட மணமக்கள் ஒன்று சேர்ந்து கருவுறச் செய்யும் ஆற்றலுடையவர்களா என்று உறுதியாக அறுதியிடுவதற் கேற்ற சரியான முறைகள் இதுகாறும் கண்டறியப்பெற வில்லை. எனினும், ஒரு மருத்துவர் சோதனையின் மூலம் பிள்ளைப்பேறு சிரமமாக இருக்கமா அல்லது பிள்ளைப்பேறே

34. s^$S1—Semen. 35. 12gps^ ættifjöS—Congenital; 36. இயல்பிகந்த தன்மை-Abnormality.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/43&oldid=598491" இலிருந்து மீள்விக்கப்பட்டது