424
இல்லற நெறி
சிறிதும் இன்பத்தையே பெறுவதில்லை. இன்னும் சில பெண் கவி புணர்ச்சியினையே வெறுக்கும் இயல்பினையுடையவர் களாகவும் உள்ளனர்; இவர்கள் பாலுறவினைத் திருமணத் தின் இன்பமற்ற கடமையாகவே கருதுகின்றனர்.
பால்விழைவே இல்லாத மகளிரிடம் பாலுணர்வும் இராதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ஆணிடம் மட்டிலும் அவள் அங்ங்ணம் பால் துலங்கல் கொள்ளாளா என்ற ஐயம் இயல்பாகவே உன்னிடம் எழலாம். தெளிவு படுத்துவேன். இதுபற்றிய செய்தியை ஒவ்வொருவரிடமும் தனித்தனி யாகத் தீர்மானித்தல் வேண்டும். ஒரு பெண் முற்றிலும் பால் தூண்டலின்றி இருக்கலாம்; எந்தச் சூழ்நிலையிலும் அவளிடம் பால் விருப்பமே எழாது; அல்லது, திருமணத்து டன் உறவுள்ள பல்வேறு கூறுகளின் விளைவாக அவ்விழை வின்மை தற்காலிகமானதாகவோ தரத்தில் குறைவான தாகவோ அவளிடம் அமையலாம். நிரந்தரமாகவே பால் விழைவில்லாத பெண்ணைக் காண்பது அரிது. காமத் தூண் உலேயே கண்டிராத பென்னிடம்தான்பாலுணர்வே.இராது. அத்தகைய பெண்ணிடம் தக்க தூண்டவிருப்பின் பால் விழைவு எழும் பாலுறவில் கருத்தில்லாத பெரும்பாலான மகளிரின் வரலாற்றை ஆய்ந்த மருத்துவ நிபுணர்கள் அவர் சளிடம் சில சமயம் பால் தூண்டல் இருந்ததாகவும் முட்டி மைதுனம்' அல்லது அது போன்ற பால் விளையாட்டின்' மூலம் அவர்கள் மனநிறைவு பெறுகின்றனர் என்றும் கூறு கின்றனர். இவர்களிடம் காம உணர்ச்சிகளை அடக்குவது, அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் அணுகுவதற்கோ அல்லது தூண்டலுக்கோ துலங்காமை காணப்பெறுகின்ற னவே யன்றி முற்றிலும் பால் விழைவு இல்லாமை அன்று.
இத்துறையில் ஆய்ந்த பாற்கலைநிபுணர்கள் பலஉண்மை
22. gplo.14 gmunggwih-Masterbation 23. பால் விளையாட்டு-Sex play