பக்கம்:இல்லற நெறி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 425

களைக் கண்டு வெளியிட்டுள்ளனர். ஆட்டோ ஆட்லர்? என் பார் பத்திலிருந்து நாற்பது சதவிகிதம் பெண்களிடம் முற்று லும் அல்லது ஒரளவு இவ்விழைவின்மை காணப்பெறுவ தாகக் கூறுகின்ருர், வேறு சிலர் நாற்பதிலிருந்து ஐம்பது சதவிகிதம் காணப்பெறுவதாக உரைக்கின்றனர் ஆஸ்திரிய நாட்டினைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் வில்ஹெல்ம் ஸ்டெகில் என்பார் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் எல்லாப் பெண்களும் ஆற்றலானவர்கள்' என்று கருதுகின்ருர் இங்ங்னம் வேறு சில அறிஞர்களும் ஆராய்ந்து முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் ஒரு சேரவைத்து யோசித்தால் நான்கு பெண்களில் ஒருவர் வீதம் பால் துலங்கலின்றி இருப்பதாக அறியடக்கிடக் கின்றது.

காரணங்கள்; இனி பால் விருப்பமின்மைக்குரிய காரணங்களை விளக்குவேன். பால்துடிப்பின் வளர்ச்சியும் அது செயற்படுவதும் உடல் உளக்கூறுகளைப் பொறுத்தவை. ஆகவே, உடற்குலைவோ உளக்குலைவோ பால் விருப்பத்தின் தீவிரத்தை அல்லது அளவினைப் பாதித்தல் கூடும். பெரும் பாலும் பிராணிகளிடையே பாற்செயல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப் பெறுகின்றது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பெண் பிராணி களிடம் முட்டை பக்குவப்படுங் காலங்களில் அதிகமான பால் விருப்பம் இருப்பதைக் காணலாம். இக்காலங்களில் அதிகமான ஹார்மோன் உற்பத்தியாவதே இதற்குக் காரண மாகும். பெண் பிராணிகளிடம் சூற்பைகளை நீக்கிவிட்டால், செயற்கை முறையில் பெண்ணின் பால்ஹார்மோன்களைச் செலுத்தி பாற்செயலைத் துாண்டலாம். ஆனல், பெண் களிடம் ஏற்படும் பால் உந்தல் குறைந்த அளவே ஹார் மோன் உற்பத்தியைப் பொறுத்துள்ளது. எனினும், தும் பிலாச் சுரப்பிகள் செயற்படுவதில் நேரிடும் சங்கடங்கள்

24. തു.പേ7 gμ' αύr?—0tto Adler. 25. cstái:G@psùtà sv@l–sté –Wilhelm Stekel, 26. szyb powÈ p-In-potent,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/431&oldid=598495" இலிருந்து மீள்விக்கப்பட்டது