பக்கம்:இல்லற நெறி.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 42?

வதைப் பார்க்கலாம். பாற்செயலிலும் பால் நடத்தை யிலும் புறக் கூறுகளே அதிகமாக முக்கிய பங்கினைப் பெறு கின்றன. ஆகவே பால் விருப்பமின்மை உண்டாவதற்கு உடற்கூறு காரணமாவதுடன் சூழ்நிலைச் செல்வாக்கும் காரணமாகின்றது எடுத்துக்காட்டாக கின்லே என்ற அறிஞர் பெண்களின் சமூகக் கல்வியின் பல்வேறு நிலைகளுக் கேற்றவாறு அவர்களிடம் குறிப்பிடத்தக்க பால்துலங் களின் வேறுபாடுகளின் தரம் காணப்பெறுகின்றது என்று கண்டறிந்துள்ளார். இதுபற்றிய முழு விவரங்களை அறிஞர் சளின் நூல்களைப்?? படித்து அறிந்துகொள்வாயாக.

பெரும்பாலான பெண்களிடம் பால் துலங்கலின்மைக்கு காரணம் திருமணத்தி 'கு நீண்ட நாட்களுக்கு முன்னரே அமைந்து கிடக்கின்றது; சிலரிடம் குழந்தைப் பருவத்தி லிருந்தே படிந்து கிடக்கின்றதாகவும் கண்டறிந்துள்ளனர். சில பெண்களிடம் பால் விருப்பமின்மையிருப்பதற்கு அவர் கள் வளர்க்கப்பெறும் சூழ்நிலையே காரணமாகும். இளமை யில் த.வருண முறையில் பாற்கல்வியைப் பெறுவதாலும், இளமையில் அடைந்த அச்சங்களையும் உள்தடைகளையும் நீக்க முடியாமையாலும் பெரும்பான்மையான பெ ன களிடம் பால் விருப்பமின்மை காணப்பெறுகின்றது. ஏற்கெனவே, பெண்களிடம் பால்துலங்கலைக் குலைக்கக் கூடிய ஒரு சில கூறுகளைக் குறிப்பிட்டுள்ளேன். இக் கூறுகள் சில சந்தர்ப்பங்களில் பால் விழைவினை முற்றிலுமே வெளிப் படாது தடை செய்தல் கூடும். அச்சம், கவலை, பாலைப் பற்றிய பயம், பணிகின்ருேம் என்ற அச்சம், வவியேற்படும் என்ற பயம், உடலுக்கு ஊறு விளையுமோ என்ற அச்சம், கருப்பம் ஏற்படுமே என்ற அச்சம், மூத்கோர் கடிவரே என்ற பயம் போன்றவை பால் விருப்பமின்மை எழுவதற்கு முக்கிய காரணங்களாகும். எடுத்துக்காட்டாக ஒரு பெண் பாலுறவு மிருகத்தனமானது, கேவலமானது, ஒழுக்கக் குறைவானது என்ற சூழ்நிலையில் வளர்க்கப் ப்ெற்று அவள் அடிக்கடி காதலின் விலைவான உடலின்பத்தைப்

27. The iliostrated Encyclopaedia of Sex: Chap 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/433&oldid=598499" இலிருந்து மீள்விக்கப்பட்டது