பக்கம்:இல்லற நெறி.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடில் நலம் 801

உள மாறுபாடுகள்: இனி, உள்ளத்தில் ஏற்படும் மாறு பாடுகளைத் தெரிவிப்பேன். சூற்பைகளின் செயல்கள் நின்று போவதே இம்மாறுபாடுகள் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். இதல்ை பெண்ணின் மனப்பான்மையே மாறுகின் றது. அச்சம், சினம், துயரம், சகிப்புத்தன்மையில் குறைவு போன்ற உணர்ச்சிகள் அடிக்கடித் தோன்றுகின்றன. சாதா ரணமாக இவை தனிப்பட்ட பெண்களின் தன்னடக்கம் மீப் பண்பு ஆகியவற்றிற்கேற்ப குறைவாகவோ அதிகமாகவோ உண்டாகின்றன. மேற்கூறியவை யாவும் பழங்காலப் பெண் களிடம் தலைக்காட்டுவதே இல்லை. ஆல்ை, நாகரிக நாரியர் நரம்புத்தளர்ச்சியாலும் மனச்கோளாறுகளாலும் பாதிக்கப் பெற்றிருப்பதற்கேற்ப இவற்ருல் அதிகத் தொல்லைப்படு கின்றனர்.

சூதக ஒய்வின் பொழுது கலவி: சூதக ஒய்வு காலக்கில் கலவி புரியலாமா என்பதையும் உனக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். பெரும்பாலான தம்பதிகள் இதனை மருத் துவர்களிடம் கலந்தாலோசிக்க நாணப்படுவர். இப்பருவத் துப் பெண்களில் பெரும்பாலோர் வயதுவந்தோர்பலருக்குத் தாயாக இருப்பt; அல்லது மாமியாராக இருப்பர்; அல்லது பாட்டியாகவும் இருப்பர். ஆகவே, இந்நிலையில் கலவியைப் பற்றிக் கலந்தாய்ந்தால் அவர்கட்கும் அவர்களது துணைவர் கட்கும் துன்பம் தருவதாக இருக்கும். எனவே, இதனை ஒவ்வொரு தம்பதிகளும் அறிந்துகொள்ளுதல் இன்றியமை யாதது.

பெரும்பான்மையான பெண்களிடம் சூதக ஒய்யு ஏற் படுங் காலத்திலும் அதற்கு முன்பும் தீவிரமான காமக் கிளர்ச்சி தோன்றுகின்றது; அவர்கள் பால்விழைவினுல் அதி கம் உந்தப்பெற்றுப் பாலின்பச்தை நாடுவர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. யோனிக்குழலிலும் கருப்பையிலும் ஏற்படும் மாற்றங்கள் பிறப்புறுப்புகளில் அதிக அரிப்பினை விளைவிக்கின்றன: இதல்ை பெண்ணின் கவனம் பிறப் றுப் புகளின் மீது செல்லுகின்றது. இந்த அரிப்பு கில சமயம் தாங்க முடியான எரிச்சல்களை உண்டாக்குவதுடன் காம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/507&oldid=598664" இலிருந்து மீள்விக்கப்பட்டது