பக்கம்:இல்லற நெறி.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

இல்லற நெறி


இளமைப் பருவத்திலுள்ள பால் தேவைகளைப்பற்றிய பிரச்சினைக்கு முழு பால் சுதந்திரம் தேவையான அளவு தீர்வினை அளிக்கக் கூடியதன்று. பாலுறவு என்பது உட லுறவு மட்டுமன்று: அதில் உள்ளக் கிளர்ச்சியுறவும் அடங்கி பள்ளது. உண்மையில் மனிதர்களின் பால் வாழ்க்கையில் பின்னர்க் கூறப்பெற்ற கூறே பெரு மகிழ்ச்சியையும் அதிக மன நிறைவினையும் அளிக்கின்றது. இத்தகைய மனநிறைவு வகையினைச் சாதாரணமாகத் தற்காலிக உறவினல்-விலை மாதர்களிடம் பெறும் உறவினைப் போன்ருே, சமூகத்தடை கட்கு அஞ்சி இரகசியமாகப் பெறும் அவசர உறவினைப் போன்ருே உள்ள உறவி ல்ை பெறுதல் முடியாது. அவை யெல்லாம் இருட்டறையில் ஏதில் பிணந்தழி இயற்று: என்பது போன்ற அநுபவமாகவே முடியும். வேகமாக மாறிக் கொண்டு வரும் இன்றைய சமுதாய வாழ்க்கையில் பால் வாழ்க்கைபற்றிய மதிப்பீடுகளின் தரம் மாறிக் கொண்டு வந்தாலும், ஒருவன்-ஒருத்தி உறவே மிகச் சிறந்த மானிட உறவாகும். இந்த இப்பிறவியில், இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று கம்பன் காட் டும் குறிக்கோள் நிலையை ஒவ்வொரு மணமக்களும் நினை வில் இருத்துதல் வேண்டும்.

குறிக்கோள் திருமணம்: இனி, குறிக்கோள் திருமணம் பற்றி ஒரு சில சொற்கள் பகிர்ந்து இக் கடிதத்தை முடிப் பேன், திருமணப் பொருத்தங்களைக் குறிப்பிட்டபோது நட்பு, பாலுறவு, குடும்பம் ஆகிய மூன்றையும் திருமணத் தின் நோக்கங்களாகக் குறிப்பிட்டேன் அல்லவா? இவை யாவும் நிறைவேறுமாயின், அதுவே குறிக்கோள் திருமணம் ஆகும்.

69. குறள்-918 70. கம்பரா.சுந்தர-சூளாமணி-செய். 34. 7.I. 635/5435 frch 9(5uporth- Ideal marriage

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/520&oldid=1285329" இலிருந்து மீள்விக்கப்பட்டது