பக்கம்:இல்லற நெறி.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

இல்லற நெறி


44.

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விளக:

இதுகாறும் எழுதிய கடிதங்களில் திருமணத்தைப் பெரும் பாலும் அறிவியலடிப்படையில்தான் ஆராய்ந்தேன். அறிவிய லடிப்படையில் பலசெய்திகளை மணமக்கள் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது என்று கருதினமையான் அவற்றை உணர்த்தினேன். இனி சமூக, உளவியல் கூறுகள் எங்ஙனம் திருமண வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன என் பதை விளக்குவேன். முதலில் இக் கடிதத்தில் பழந்தமிழர் கொண்ட மனமுறைகளை ஒரளவு விளக்குவேன்.

ஊழ்வலியால் தொடர்பு: பழங்காலத்தில் தமிழ் மக்கள் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் ஏற்படும் காதல் உறவு ஊழின் வலியால்தான் ஏற்படுகின்றது என்று நம்பினர்.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணேயின்'

என்ற தொல்காப்பிய நூற்பாப் பகுதியால் இதனை அறிய லாம். அன்புடையார் இருவர் யாதொரு முயற்சியும் உள் ளக் குறிப்புமின்றி முற்பிறப்பின் நல்வினைப் பயனகத் தம்மி பல்பில் நிகழும் இந்த உறவினைப் பண்டையோர் . இயற்கைப் புணர்ச்சி என்றும், தெய்வப் புணர்ச்சி என்றும் வழங்கினர். முதற்காட்சிக்கு நல்லூழே காரணம் என்று கருதப்பெற்ற மையால் உயர்ந்த பால தானையின்' என்றும், அவ்விருவரும் பண்டைப் பிறப்புகளில் பயிலியது செழிஇய நட்புதான் அந்த ஊழின் ஆணைக்குக் காரணம் என்றும் கருதப்பெற்ற

--

1. தொல்-பொருள்-களவு-நூற். 2 (இளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/526&oldid=1285331" இலிருந்து மீள்விக்கப்பட்டது