பக்கம்:இல்லற நெறி.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 589.

றது. சில குழவிகள் உடல் வளர்ச்சியின்றி வலிவற்றும் வளர்ச்சி த டைப்பட்டும் கிடக்கின்றன; சில குழவிகள் அறிவு வளர்ச்சியின்றி மந்த மதியுடனும் உள்ளன; இன்னும் சில குழவிகள் உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சியி ன்றி முதிர்ச்சியடையா நிலையில் இருக்கின்றன. பெரும்பாலான மனிதர்கள் முழு வளர்ச்சியை ஒருபொழுவதும் அடைவதே இல்லை. அவர்கள் தம்முடைய சிந்தனையிலும், உணர்ந்து பார்க்கும் தன்மை யிலும், தம்முடைய செயல்களிலும் 'குழந்தை நிலையி லேயே உள்ளனர். அன்ருட வாழ்க்கையில் இதற்கு எண் ணற்ற எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

முதிர்ச்சியின் அறிகுறிகள்: ஒருவரிடம் காணப்பெறும் முதிர்ச்சிக்கான அறிகுறிகள் யாவை? இவற்றை நீ அறிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக, முதிர்ச்சி அடைந்த மணி தனின் கிந்தனையின் உள்நோக்கும் முன்நோக்கும்? காணப்பெறும். அவன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள உலகையும் சரியாக அளவிட்டு மதிப்பீடு செய்து கொள்ளு கின்ருன். இளமையில் நாம் சாதாரணமாக மனக்கோட்டை கட்டிக்கொண்டு அதில் வாழ்கின்ருேம்; நம்மை நாம் தேர்ந் தெடுக்கப் பெற்றவர்கள் என்றும், அன்புக்கு உரியவர்கள் என்றும், கதாநாயகர்கள் என்றும் ஒருவிதமாகவும். அல்லது உதறித் தள்ளப்பெற்றவர்கள் என்றும், வெறுக்கப்பெற்றவர் கள் என்றும், கேவலப்படுத்தப்பெற்றவர்கள் என்றும் மற் ருெரு விதமாகவும் எண்ணிக்கொள்ளுகின்ருேம். நாம் வளர வளர நம்மை நாம் படிப்படியாக நன்கு புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்கின்ருேம்; நம்முடையவன்மையும் மென்மை யும், திறனும் திறனின்மையும் நமக்கு நன்கு புலகைத் தொடங்குகின்றன. நம்முடைய சிந்தனையிலும் உணர்விலும் நடத்தையிலும் நாம் உள்நோக்கினை அடைகின்ருேம்.

16: 2.6*(3/513 g5—Insight 17. (pāGgsrå65 -Foresight,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/545&oldid=598748" இலிருந்து மீள்விக்கப்பட்டது