பக்கம்:இல்லற நெறி.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 5.53

48

அன்பார்ந்த செத்தில்வேலனுக்கு, நலன், நலனே விழைவல்.

நான் உனக்கு எழுதிவரும் கடிதங்களைப் பலரும் படித் திருப்பர் என நினைக்கின்றேன். ஏனெனில், திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் இளைஞர்கள் செய்யவேண்டி யவை யாவை என்பதுபற்றிப் பலர் கடிதம் எழுதி வினவி யுள்ளனர், ஒவ்வொரு இளைஞனும், இளம் பெண்ணும் திரு மணத்திற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டியவற்றை இக் கடிதத்தில் கூறுவேன்.

முதற்படி: இளம் வயதினர் கவனிக்கவேண்டிய முதற் படி முதலில் திருமணத்திற்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டியதாகும். இன்று ஆடவரும் பெண்டிரும் ஒரளவு பொதுக் கல்வி பெற்று வாழ்க்கையின் தத்தமக்குப் பொருத்தமான தொழில் துறைகளிலும் பயிற்சி பெறுகின்ற னர். ஏராளமான பணத்தையும் காலத்தையும் இதற்காகச் செலவிடுகின்றனர். ஆனால், ஒருவராவது வாழ்க்கையில் தமக்கு மிகவும் இன்றியமையாதனவாயுள்ள திருமண உறவு, தாம் பெற்ருேராதல் என்பவைபற்றிச் சிறிதள வேனும் அக்கறை கொள்வதில்லை; பொறுப்பும் எடுத்துக் கொள்வதில்லை. அவற்றைப்பற்றிக் கவலை கொள்வதும் இல்லை. எத்தனையோ துறைகளில் அறிவியல் பொது மக் களின் அன்ருட வாழ்வில் புகுந்துள்ளது. அதன் நன்மைகளை அன்ருட வாழ்வில் அவர்கள் துய்த்தும் வருகின்றனர். ஆயி னும், வாழ்வின் ஒரு கூருகவேவுள்ள திருமணம்பற்றி ஒரு வரும் அக்கறை கொள்ளாதது வருந்தத் தக்கதாகவே உள்ளது,

யான் சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகும் அன்பர் ஒருவருக்குத் திடீர் திடீரென்று உத்தியோகத்தில் ஏற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/559&oldid=598778" இலிருந்து மீள்விக்கப்பட்டது