பக்கம்:இல்லற நெறி.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வு.ை இல்வாழ்க்கை 567

மும் போட்டுக் கொள்ளல் எளிது; அவர் பண்ணுக்கேற்ற வாறு தாளத்தை எளிதில் அமைத்துக் கொள்ளலாம். பாடு வது ஒருவரும் தாளம் போடுவது ஒருவருமாக அமைந்தால் இந்நிலையை எளிதில் அமைத்துக்கொள்ள இயலாது, பன் ணும் தாளமும் ஒத்துப் போகுமாறு செய்தல் இருவர் பொறுப்பிலுமுள்ளது. தொடக்கத்தில் இது பொருந்துவது சற்றுக் கடினமாக இருப்பினும் பயிற்சியாலும் முயற்சி யாலும் நாளடைவில் இத்தி ைசரியாக அமைந்துவிடும். திருமணத்திலும் மணமக்களிடையே திருப்தியான முறையில் உடல், உள்ளக்கிளர்ச்சிப் பொருத்தப்பாடுகள் அமைவதற் குச் சிறிது காலம் வேண்டும். ஒருவரது நடத்தைக் கோலங் களும் வாழ்க்கை முறைகளும் மற்றவரது நடத்தைக் கோலங் களுடனும் வாழ்க்கை முறைகளுடனும் பொருந்துவதற்குசி சிறிது காலம் கட்டாயம் வேண்டும். சகிப்புத் தன்மையும் பொறுமையும் இருந்தால் திருமண வாழ்க்கை வெற்றியாக முடியும் மன மக்களின் குடும்பத்தாரிடம் இணக்கம் ஏற்படு வதற்கும் சிறிது காலம் வேண்டும்; அவர்களுடன் மணக்கள் ஒத்துப் போவதற்கும் கால இடையீடு அவசியம் வேண்டும். மருமகள் மாமனர் மாமி பாருடன் ஒத்துப் போதற்கும், அங்ங்ணமே மருமகன் மாமனுர் மாமியாருடன் ஒத்துப் போதற்கும் கிறிது காலம் வேண்டும். ஒருவர் மற்றவரது நோக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினை யும் புரிந்துகொண்டு திருப்தியான உறவு அமைவதற்கு இரு சாரார்பாலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும்வேண்டும்: கலந்து உறவாடுவதற்குக் கால இடையீடும் வேண்டும்.

எட்டாவது: மணமக்கள் திருமணத்தைப் பேணி வளர்த் இல் வேண்டும். சிறுசெடியை மரமாதல் வரையிலும் அதற் குப் பின்னரும் தோட்டக்காரன் கண்ணும் கருத்துடனும் பேணுவதைப் போலவே, புதிய திருமண உறவைப் போற்றி வளர்த்தல் வேண்டும். உயர்ந்த முறை உரங்களும் ஒழுங் கான நீர்ப்பாய்ச்சலும் செடி நன்கு செழித்து வளர்வதற் குத் துணையாக அமைகின்றன. அங்ங்னமே, மணமக்கள் ஒருவர்பால் மற்றவர் காட்டும் அன்பு, பரிவு, கவனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/573&oldid=598810" இலிருந்து மீள்விக்கப்பட்டது