பக்கம்:இல்லற நெறி.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

இல்லற நெறி


இணக்கம், நடத்தை நயம் போன்ற பண்புகள் இருவரிடை யேயுள்ள உறவு செழித்து வளரத் துணை செய்யும்; அவை வெயிலும் மழையுமாக இருந்து அதனை வளமாக வளரச் செய்யும். மண மக்களிடையே உள்ள அன்பு மனத்தளவில் நிற்றல் போதாது; சொல்லாலும் செயலாலும் அது வெளிப் படுதல் வேண்டும். மன அளவிலுள்ள அன்பு மிக ஆழமாக அமைந்திருப்பினும் புறத்தே அது வெளிப்படையாகத் தெரிதல் வேண்டும். சொல்லும் செயலும் இதற்குத் துணை செய்யும். தோட்டக்காரன் செடியின் வளர்ச்சிக்கு இடை யூறுகளாக உள்ள களைகளை அடிக்கடி நீக்குவதுபோலவே, திருமண உறவுக்குத் தடைகளாக அமையும் கூறுகளை அவ்வப்பொழுது நீக்கி அமைத்தல் மிகவும் இன்றியமை யாதது. மணமக்களின் அன்ருட வாழ்வில் தோன்றும் கருத்து மாறுபாடுகள், கோப்தாபங்கள், வேறு பிரச்சினை கள் போன்றவற்றை இருவரும் நன்கு கலந்து பேசி நீக்கிக் கொள்ளல் வேண்டும். இளைதாக முள் மரம் கொல்க,க்கி என்ற பொய்யா மொழியை எண்ணி அவற்றை அவ்வப் பொழுது நீக்கிக்கொள்ளல் சாலப் பயன்தரும். நாளடை வில் அவை எழாமலே போதலும் கூடும்.

ஒன்பதாவது: தேவையுள்ள பொழுது மணமக்கள் தக்கா ரின் அறிவுரையைக் கோருகல் மிகவும் வேண்டற்பாலது. மணமக்கள் தம் இடையூறுகளைத் தாமாகப் போக்கிக் கொள்ள இயலாத நிலையிலிருந்தால் தக்கார நாடுதல் வேண்டும். திருமணம்பற்றிய அறிவுறை வழங்குதல் இன்று மேடுைகளில் ஒரு சமூக அறிவியலாகவும் சமூகக்கலையாகவும் வளரத் தொடங்கியுள்ளது. மகத்துவர்கள், அமைச்சர்கள், சமூக அறிவியலறிஞர்கள், கல்வி நிபுணர்கள் ஆகியோர் இப் புதியவகை சமூகத் தொண்டிலும் பயிற்சியிலும் தம்மை ஈடு படுத்திக்கொண்டு வருகின்றனர். பயிற்சி பெற்ற நிபுணர்கள் திருமணம்பற்றிய அறிவியலடிப்படையிலமைந்த அறிவுரை

44. குறள்-873

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/574&oldid=1285356" இலிருந்து மீள்விக்கப்பட்டது