பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

சுடக்குப்போடல் - இழிவுபடுத்தல்

1

சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலைக் கூட்டி ஒலி யுண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலியுண்டாக்கி நாயைக் கூப்பிடல் எவரும் அறிந்தது. “சுடக்குப் போட்டுக் கூப்பிடு என்றால், நாயைக் கூப்பிடுவது போலக் கூப்பிடு என்பது குறிப்புப் பொருளாம்.

"நீ பார்! நான் சொன்னபடி செய்யத் தவறினால் சுடக்குப் போட்டுக் கூப்பிடு "என்பது பல்கால் கேட்கும் வஞ்சினச் செய்தியாம். ஒருவருக்கொருவர் உண்டாம் போட்டி, தருக்கம், பகை இவற்றால் சொல்வது இது. ‘வஞ்சினக் காஞ்சி’

L

புறத்துறையுள் ஒன்று.

சுண்டப் போடல் - பட்டுணி போடல்

சுண்டுதல், காய்தல், நீர் வற்றிப் போகக் காய்தல் சுண்டுதல் எனப்படும். சுண்டை வற்றல், காய்தலாலும், சிறிதாதலாலும் பெற்ற பெயர். சுண்டக் காய்ச்சிய பாலில் சுவை மிகுதியாம். வயிற்றுள் ஒன்றும் இல்லாமல் போமாறு பட்டுணி போடலும், நரம்புகள் சுண்டி இழுக்குமாறு பட்டுணி போடலும் சுண்டப் போடல் எனப்படும். “வயிற்றைச் சுண்டப் போட்டால் தான் வழிக்கு வருவாய்” என்பது வழக்குமொழி. சுண்டல் விற்பனை கடற்கரைப் பகுதியில் காணவேண்டுமே.

சுமைதாங்கி - பொறுப்பாளி

கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில் வழிகளில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி. இவ்வறச் செயலைச் செய்தால் வயிறு வாய்த்து மகவு தங்காமல் போனவர்க்கும் மகவு தங்கு மென நம்பிக்கை ஊட்டியமையால் அத்தகையவரும் இவ்வறச் செயலைத் தலைப்பட்டுச் செய்தனர். அச்சுமைதாங்கி எப்படித் தாங்க முடியாச் சுமையைத் தாங்கி உதவுவதுடன், அப் பொருளை வைத்தது வைத்தபடி எடுத்துக்கொண்டு போதற்கும் வாய்ப்பாக உதவுகிறதோ அப்படி, தலைமையாள் இல்லாத குடும்பத்திற்குத் தலைமையாக இருந்து தாங்குவாரைச் சுமை தாங்கி என்பது வழக்காயிற்று. அதனால் சுமைதாங்கி என்ப தற்குப் பொறுப்பாளி என்னும் பொருள் வந்தது. குடிதாங்கி என்பவன் ஒரு வள்ளல்! பாடுபுகழ்பெற்றவன்! அவன் பாவம்! இடிதாங்கியாவான்!