பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

சுரண்டுதல் - சிறிது சிறிதாகக் கவர்தல், உதவி கேட்டல்

85

சொறி சிறங்குக்காகக் கையால் சுரண்டல் உண்டு, களை சுரண்டல், சட்டி பானை சுரண்டல் என்பவையும் சுரண்டுதல் என்பதன் நேர் பொருளன, சுரண்டுதற்குரிய கருவி ‘சுரண்டி எனப்படும். ஒருவர் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அப்பொறுப்பால் வரும் வருவாயைச் சுருங்கச் சுருங்க எடுத்துத் தனக்காக்கிக் கொள்ளல் சுரண்டல் எனப்படும். உழைப்பைச் சுரண்டலும் சுரண்டலே. இச்சுரண்டலில் வேறானது உதவி கேட்டல் பொருள்தரும் சுரண்டல். “என்ன கையைச் சுரண்டு கிறான்” “தலையைச் சுரண்டுகிறானே என்ன” என்பவை எத்த னையோ எதிர்பார்த்து நிற்பதைச் சுட்டும் குறிப்புகளாம். என்ன வேண்டும் என்று கேட்டு வழங்குவதுண்டு.

6

சுருட்டி மடக்கல் - அடங்கிப்போதல்

பூனையையோ பன்றியையோ கண்டு சீறிப்பாய்ந்து குரைக்கும் நாய், தன்னில் வலிய நாய்வந்தால் வாலைச் சுருட்டி மடக்கி இரண்டு கால்களுக்கும் இடையே வைத்துக் கொண்டு ஓடும். அதுபோல் ஏழை எளியவரைப் பாடாப்பாடுபடுத்தும் சிலர், வலிமையானவர்களைக் கண்ட அளவில் தமது வாயை மூடி, கைபொத்தி, குனிந்து வளைந்து சொன்னதைக் கேட்டு நடப்பர். இத்தகையவரை ‘அடாவடிக்காரனைப் பார்த்தால் வாலைச் சுருட்டிக் கொள்வான்; ஆளைப்பார் ஆளை; இப்பொழுது அவனை மருட்டட்டுமே” என்பர். சுருட்டி மடக்கல் வலிமையைக் கண்டு நிமிருமா? மெலிமைக்கன்றோ நிமிரும்? சுருள் வைத்தல் - பணம் தருதல்

66

சுருள் வைத்தல், சுருள் வைத்து அழைத்தல் என்பனவும் வழக்கில் உள்ளனவே. சுருள் என்பது பணத்தைக் குறிக்கிறது. ‘சுருள்பணம்’ எவ்வளவு வந்தது என்பதில் பொருள் தெளிவாக உள்ளது. ஆனால் சுருளுக்கும் பணத்திற்கும் என்ன தொடர்பு?

வெற்றிலையைச் சுருள் என்பது வழக்கு. சுருட்டி மடக்கித் தருதல் என்னும் வழக்கில் இருந்து அது வந்தது. அதில் பணம் வைத்து வழங்குதல் உண்மையாதல் சுருள் என்பதற்குப் பணம் என்னும் பொருள் உண்டாயிற்றாம். 'இலைவயம்' காண்க. சுரைக்குடுக்கை - ஓயாப் பேசி

சுரைக்குடுக்கை என்பது முற்றிக் காய்ந்து போனதாகும். அதனைக் குலுக்கினால் சலசல என ஒலியுண்டாகும். மெல்ல