பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

1

அசைத்தாலும் ஆளசைக்காமல் காற்றால் உருண்டாலும்கூட ஒலிக்கும். அதனால், சளசள என ஓயாமல் பேசுபவனைச் சுரைக் குடுக்கை என்னும் வழக்கு உண்டாயிற்று. வாகை நெற்று' சலசலப்பதை சங்கப்பாடல் காட்டும். கிலுகிலுப்பைக்கு உவமையும் படுத்தும், மக்கள் வழக்கோ ஓயாப் பேசியைச் சுரைக்குடுக்கையாகச் சொல்கிறது.

சுள்ளாப்பு - தொடுகறி

ரு

சுள்ளென்று வெயிலடித்தல், சுள்ளென்று உழைத்தல் எனச் சொல்வது வழக்கு. சுள்ளென்று உறைப்பது மிளகு, மிளகாய் என்பவை. அவ்வாறு உறைப்புமிக்க கறியும் சுள்ளாப்பு எனப்படும். கள் சாராயம் குடிப்பவர் குடிக்குத் துணைப் பொரு ளாகப் பயன்படுத்தும் உறைப்பான கறிகள் சுள்ளாப்பு என வழங்கப்படுகிறது. ஆனால் வீட்டில் தொடுகறியாகப் பயன் படுத்தப்படுவன அவ்வாறு அழைக்கப்படுவது இல்லை. இது குடியர் வழக்காம். சில இடங்களில் அடித்தல் பொருள் அதற்கு உண்டு. சுள்ளாப்பு வைத்தால்தான் சொன்னது கேட்பாய் என்பர். சுற்றிவளைத்தல் - நேரல்லாவழி

“வட்டம் சுற்றி வழியேபோ” என்பது பழமொழி. உரிய வழிப்படி போதல்வேண்டும் என்பதைக் குறிப்பது அது. இச் சுற்றி வளைப்பு அத்தகையதன்று. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து, அதற்குச் சார்பான மற்றவற்றைப் பேசித் தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலே சுற்றி வளைத்தலாம். சுற்றி வளைத்தல் வேட்டைத் தொழிலில் காணக் கூடியது. குறிவைத்துக் கொண்டு ஒருவர் ஓரிடத்து இருப்பார். பிறர் வேட்டை விலங்குகளைச் சுற்றி வளைத்துக் குறிக்குக் கொண்டு வந்து சேர்ப்பர். வேட்டையர் நோக்கு வெற்றியாக நிறைவேறிவிடும். ஆகலின் நேரல்லா வழி என்னும் பொருளது ஆயிற்று. நேரல்லாமை நேர்மை அல்லாமை தானே. வட்டம் சுற்றி வழியே போ என்பது பழமொழி.

சூடாகப்பேசுதல் - சினந்து பேசுதல்

உள்ளம் வெதும்பிப் பேசுவதால் சூடாகப் பேசுதல் எனப் படும். வன்மையாகச் சொல்லும் சொல் “சுடு சொல்” எனப்படும். “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்பதும் “வில்லம்பு சொல்லம்பு” எனவரும் வழக்கும், 'நின் குலத்தைச் சுட்டதடா என் வாயிற் சொல்” எனவரும் கம்பர் தனிப்பாட்டும் சூடாகப் பேசுதல் சுடு சொல் என்பவற்றை

66